Dark Giant

Rating 3.5/5

57

a K Vijay Anandh review

பொதுவாக அமானுஷ்ய படங்கள் என்றாலே ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் என்று தூக்கலாக வைத்து ரசிகர்களை பயமுறுத்த முயற்சிப்பார்கள்.

இந்தப்படத்தில் அவற்றை அப்படியே புறந்தள்ளி, நடிகர்களின் முகபாவனைகள் மற்றும் காட்சிகளின் கோணங்கள் முக்கியமாக தொய்வில்லாத திரைக்கதை ஆகியவற்றை மட்டுமே நம்பி, அட்டகாசமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே எஸ் கிஷன்.

சொந்த கிராமத்தைவிட்டு பலவரிடங்களுக்கு முன்பே வெளியேறிய, ஆதர்ஷ்,  காதல் மனைவி ஜோவிதா லிவிங்ஸ்டன், தங்கை கீர்த்தி ஆகியோருடன் கடன் தொல்லைகள் நிறைந்த ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இன்னொரு பக்கம் அவருக்கு கொடுத்த கடனை திருப்பி கேட்க நடையாய் நடக்கும், அமுதவாணன்.

கிராமத்தில் தன் விடுதலைக்காக மதனின் நேரடி வாரிசு ஒன்றை பலிகொடுத்து  பழிதீர்க்க காத்திருக்கும், கருப்பு பூதம்.

என்று,  சம்பவங்களை முடிச்சு போட்டு, நாலஞ்சு நடிகர்களை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

இல்லாத தாத்தா, இல்லாத உறவினர் அழைப்பின் பேரில், சொத்துக்காக சொந்த கிராமத்திற்கு செல்வதிலிருந்து பயம் ரசிகர்களையும் தொற்றிக்கொள்கிறது .

பிளாஷ்பேக்கில் வரும் மதன், சோனியா அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் யதார்த்தம். அதிலும் அப்பா மற்றும் கருப்பு பூதம் சம்பந்தப்பட்ட காட்சிகளை  முதலிலும், அம்மா சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தின் இறுதியிலும் வைத்து திரைக்கதையை ஒரு கலைக்கூத்தாடி மாதிரி பேலன்ஸ் செய்த விதம் அருமை.

மூத்த  நடிகர்கள் கே பாக்யராஜ், லிவிங்ஸ்டன், சோனியா அகர்வால்  முதல், காவல்துறை அதிகாரியாக வரும் ரபீக் பாஷா, தங்கையாக வரும் கீர்த்தி, நாயகன் ஆதர்ஷ், அவரது ஜோடி ஜோவிதா லிவிங்ஸ்டன் என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கீர்த்தியை ஒருதலையாக காதலிக்கும் விஜயின் நகைச்சுவை போராடிக்கவில்லை.

டார்க் ஜெயண்ட் ஒரு நேர்மையான படைப்பு!