a K. Vijay Anandh review
டிமாண்டி காலனி 2 முழுக்க முழுக்க பிரியா பவானி சங்கருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல ஆரம்பித்து பயணித்து இறுதியில் அருள் நிதியை வைத்து ரசிகர்களை மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள் .
படத்தில் மிரட்டுவது , ஸ்பெஷல் எபெக்ட்ஸ் க்ளோ அல்லது பேய்களோ அல்ல. மாறாக சாம் சி எஸ்ஸின் இசை தான் காதை பிளக்கிறது. பாடல்கள் இல்லை என்கிற கடுப்பும் சேர்ந்துகொள்ள மனிதர் , பின்னணி இசையாலேயே மிரட்டியிருக்கிறார்.
மிகச்சிறிய அளவில் கூட உருவ வேறுபாடு இல்லை என்றாலும், சின்ன சின்ன உடல்மொழிகளில் வித்தியாசம் காட்டி இரத்திடை வேடத்தில் ஜொலிக்கிறார் அருள்நிதி .
முன்பே குறிப்பிட்டது போல பிரியா பவானி சங்கர் க்கு இந்தப்படம் பெரிய அளவில் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அவரும் அதை கச்சித்தமாக கையாண்டிருக்கிறார்.
சித்தப்பா கம் வழக்கறிஞராக வரும் முத்துக்குமாருக்கும் இப்படத்தில் நல்ல வாய்ப்பு. படம் முழுவதும் வருகிறார். சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.
ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு குறிப்பாக ப்ரீ கிளைமாக்சில் வரும் கண்ணாடியில் பல பிம்பங்களாக எதிரொலிக்கும் காடசியில் ஒவ்வொரு கண்ணாடியாக உடைத்து கொண்டு வரும் அருள் நிதி சம்பந்தப்பட்ட காட் சிகள் தொழில்நுட்ப கையாடலுக்கு சிறந்த உதாரணம்.
3 ஆவது பாகத்திற்கு தேதி குறித்து விட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் அசால்ட்டாக திரைக்கதை அமைத்து விட்டாரோ அஜய் ஞானமுத்து என்று நினைக்க தோன்றாமல் இல்லை.
காட்சிகள் வேகமாக நகர்வதால் டிமாண்டி காலனி 2, சுவராஸ்யமான பொழுதுபோக்காக அமைந்து விடுகிறது.