Black

mysixer rating 3)5

71

a K Vijay Anandh review

உளவியல் குறைபாடும் இல்லாமல் பேய் பிசாசு போன்ற அமானுஷ்ய தீய சக்திகளும் இல்லாமல் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து ஒரு விறுவிறுப்பான படத்திற்கு முயன்றிருக்கிறார் இயக்குனர் கே ஜி பாலசுப்பிரமணி.

இங்கே இதெல்லாம் சாத்தியம் என்பதற்கு எப்படி ஒரு ஆராய்ச்சி தேவைப்படுகிறது அதைப்போலவே இதெல்லாம் சாத்தியமா என்பதற்கும் ஒரு ஆராய்ச்சி தேவைப்படுகிறது. அந்த வகையில் இங்கு எல்லாமே சாத்தியமே என்பதுதான் விடையாக இருக்கிறது.

அப்படி 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கோள்கள் குறிப்பாக பூமிக்கு மிக அருகே வரும் ப்ளூ மூன் என்பதை அடிப்படையாக வைத்து அதன் மூலம் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் என்பதாக திரைக்கதை அமைத்த விதமும் புதுமை.

அப்படி ஒரு பிளாக் ஹோல்க்குள் சென்று மேலும் அல்லது மாட்டிக் கொள்ளும் ஜீவா பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரின் இரவு பரிதவிப்பு தான் பிளாக்.

பிரியா பவானி சங்கருக்கும் இப்படிப்பட்ட ஒரு திகில் திரைக்கதைகளுக்கும் ஒரு பொருத்தம் இருக்கிறது இப்படிப்பட்ட படங்களில் அவர் நடிக்கும் பொழுது அந்த படங்கள் வணிகரீதியாக வெற்றியையும் பெற்றுவிடுகிறது.

ஜீவா, ஒரு ஆக்ரோஷமான இளைஞன் அன்பான கணவன் என்று அழகாக நடித்திருக்கிறார்.

விவேக் பிரசன்னாவிற்கு இந்த படத்தில் ஒரு சவாலான கதாபாத்திரம். செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து அது எப்படி நடந்தது என்பதை ஆராய்ச்சி செய்து, தன்னைத் தேடி ஜீவா வரும் பொழுது விளக்கம் இடம் அருமை. வில்லனாக இருந்து விஞ்ஞானியாக மாறிவிட்ட ஒரு கதாபாத்திரம்.

அட புது வீடு வாங்கி குடியேறும் பொழுது ஒரு சாமி போட்டோவாவது இல்லாமலா உள்ளே போவாங்க என்கிற கேள்வி எழாமல் இல்லை.

இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கையை ஒரு ரிமோட் மூலம் பேக்வேர்ட் ஃபார்வேர்ட் செய்து பார்த்துக் கொள்ள முடியுமானால் எப்படி இருக்கும்? அப்படி அமைக்கப்பட்டிருக்கும் பிளாக் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு புதிது.