இன்றைய திரைத்துறை சார்ந்த படிப்புகள் மற்றும் உள்ளங்கையில் வந்துவிட்ட தொழில்நுட்பம் ஆகியவை திரைப்படத் துறையில் ஆர்வம் உள்ள இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறிவிட்டன.
அந்த வகையில் உதவி இயக்குனராகவோ அல்லது இயக்குனராகவோ வாய்ப்புகளுக்காக தேடிக் கொண்டிருக்காமல் தங்களது கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்புகளை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள் இந்த 2K கிட்ஸ் என்று அழைக்கப்படும் இன்றைய தலைமுறை.
அபிஷேக் சரவணா , எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் இளநிலை விஸ்காம் டிகிரி முடித்த கையோடு, திரைப்பட இயக்கம் என்கிற தனது லட்சியத்தை அடையும் முதல் படியாக காதல் அவைட்ஸ் Kadhal Awaits என்கிற ஆல்பத்தை இயக்கியிருக்கிறார். இந்த முயற்சியில், ஒளிப்பதிவு , எடிட்டிங், பாடல் மற்றும் இசை ஆகிய ஒவ்வொரு துறைகளுக்கும் அந்தந்த துறைகளில் முன்னேற துடிக்கும் தனது சக நண்பர்களையே பயன்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
INT Entertainment N தங்கவேல் ரமணி தயாரிப்பில், முத்துவேல் மற்றும் யோகா ஆகியோர் நடிக்க, Sparx Musicals இசையில் கீர்த்தனா சுரேஷ் எழுதிய பாடலை ஹரிஹரன் பாட, ஒரு இளம் பாடலாசிரியரின் காத்திருக்க போகும் தன் காதலை சொல்லும் ஆல்பமாக அபிஷேக் சரவணா இயக்கி இருக்கும் Kadhal Awaits பல ஆயிரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
Kadhal Awaits ஆல்பத்தின் இயக்குனர் அபிஷேக் சரவணா உள்ளிட்ட குழுவினருக்கு நிச்சயம் திரை உலகில் Bright Future Awaits என்றால் மிகை ஆகாது!