ராமாயணா

தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா

33

a K Vijay Anandh review

கதையாக, நாடகமாக, தொலைக்காட்சி தொடராக எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்க தோன்றும் ஒரு கதை என்றால் அது நமது ராமாயணம் மட்டுமே.

இந்தப் படம் கூட இந்த படம் கூட ராஜமவுலி படங்கள் போல பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கவில்லை, வெறும் 2 D அனிமேஷன் தான். ஆனாலும் தசரதனின் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி உள்ளிட்ட தவப்புதல்வர்களின், பிறப்பிலிருந்து ராவண வதம் வரை மிகவும் நேர்த்தியாக ஒரு விறுவிறுப்பான படமாக ராமாயணா தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா திரைப்படம் அமைந்திருக்கிறது.

15 வயது ராமனாக தாடகையை வதம் செய்வதிலிருந்து, மிதிலை நகரில் சிவ தனுஷை வளைத்து சீதா மாதாவை திருமணம் செய்வது, சிற்றன்னை கையேயிக்கு  கொடுத்த தந்தையின் வாக்கை, சிரமேற்கொண்டு தனது மனைவியுடனும் தம்பி லட்சுமணன் உடனும் 12 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்வது.

வனத்தில், அத்தனை உயிரினங்களும் ஸ்ரீராமனுக்கும் சீதா மாதாவிற்கும் தொண்டு செய்வது, அங்கே வாழும் பிணம் தின்னி கழுகுகள் கூட ராமன் வருகைக்கு பின் சைவ பட்சிகளாக மாறி விடுவது என்று ஒவ்வொரு காட்சிகளும், மனதிற்கு மிகவும் நெருக்கமாக அமைந்து விடுகின்றன.

அதன் பிறகு சூர்பனகையின் சூழ்ச்சியால் ராவணன் சீதையை கவர்ந்து செல்வது அனுமன் உள்ளிட்ட தனது படைகளின் உதவியுடன் ராமன், ராவணனை போரில் வதம் செய்து, அந்த நாட்டை விபீஷணனுக்கு வழங்கி அயோத்தி திரும்புவது என்று ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் நேர்த்தியாக  வரையப்பட்டு, காட்சிகளாக திரையில் விரிகின்றன.

கிரியேட்டிவ் டைரக்டர் விஜேந்திர பிரசாத் முதல், கதாபாத்திரங்களை வரைந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உயிரூட்டி இயங்க வைத்தவர்கள் என்று  ஒவ்வொருவரையும் பாராட்ட தோன்றுகிறது.

அனுமனின் சாகசங்கள் மற்றும் பொருட்காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, கதையை சொல்லும் ரவூரி ஹரிதா முதல் ராமனுக்கு குரல் கொடுத்த செந்தில்குமார்,  சீதைக்கு  குரல் கொடுத்த டி மகேஸ்வரி, ராவணனுக்கு குரல் கொடுத்த பிரவீன் குமார், லட்சுமணனுக்கு குரல் கொடுத்த தியாகராஜன், அனுமனுக்கு குரல் கொடுத்த லோகேஷ் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

கிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ராமாயணா , தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா 2 D அனிமேஷன் படத்தை காண தவறாதீர்கள்.