மகளிர் பத்திரிகையாளர்களுக்கு மரியாதை

179

பத்திரிகையாளராக இருந்து தயாரிப்பாளராக அடி எடுத்து வைத்திருக்கும் எஸ் கவிதா தயாரித்திருக்கும் படம் ராபர். வரும் மார்ச் 14-ல் வெளியாக இருக்கும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா  இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், நடிகைகள் அம்பிகா, ரம்பா  ஆகையருடன் திரைக்கதை மன்னன் இயக்குனர் பாக்யராஜ், சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, தன்னுடன் இத்தனை ஆண்டுகள்,  திரைப்பட பத்திரிகையாளர்களாக வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சக மகளிர் பத்திரிகையாளர்களான ரிங்கு குப்தா, விஜயலட்சுமி, ஷாலினி,  பத்மா, தீபா, ஜாஸ்மின், ஹேமா மற்றும் சுஷ்மா ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர்களான அம்பிகா மற்றும் ரம்பா அவர்களைக் கொண்டு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

எந்த துறையும்,  பெண்களுக்கு சவாலான ஒன்று தான் என்றாலும் வெயில் மழை என்று பாராமல் கையில் கேமராவுடன் அன்றாட நிகழ்ச்சிகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு கடுமையாக பணியாற்றும் பத்திரிக்கை துறை என்பது, பெண்களுக்கு மிகவும் சவாலான ஒன்று தானே. அந்த வகையில், அவர்களுக்கு, நாளை நடைபெறவிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  மேடையில் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்ட தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான எஸ் கவிதாவின் இந்த செயல் பத்திரிகையாளர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் நெகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது என்றால் மிகை அல்ல.