– K Vijay Anandh
குடும்பத்தோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரையும் கட்டி போட்டு இருக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 என்றால் அது மிகையாகாது.
தமிழகம் தாண்டி உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் குடும்பங்கள் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்கள் அத்தனை பேரும் கொண்டாடும் நிகழ்ச்சி ஆக இந்த நிகழ்ச்சி திகழ்ந்து வருகிறது.
வாரந்தோறும் கொடுக்கப்படும் தலைப்புகளுக்கு ஏற்றவாறு வந்து கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் ஆகட்டும், இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக விளங்கும் மனோ, சித்ரா மற்றும் டி இமான் ஆகட்டும், இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள குழந்தைகளிடம் அவர்கள் காட்டும் அன்பு மற்றும் கண்டிப்பு அதைத் தாண்டிய வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உறவு என்று இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக பல நேரங்களில் பார்ப்பவர்கள் கண்கள் குளமாகும் அளவிற்கு நடந்து வருகிறது.
இன்று மார்ச் 15 நடந்த எபிசோடை , போட்டு வைத்த காதல் திட்டம் என்கிற பாடலை, உச்சகட்ட எனர்ஜி லெவலில் டி இமான் அட்டகாசமான பாடி இசைக்கு ஏற்றவாறு நடனமாடி தொடங்கி வைத்தார்.
சிங்காரவேலன் படத்தில் வரும் அந்தப் பாடலை, டி இமான் பாடிய விதத்தை கமல்ஹாசன் கேட்க நேர்ந்தால் இந்தப் பாடலுக்கு மறுபடியும் ஒரு நடனம் ஆடுவார் என்றால் மிகை ஆகாது. அந்த அளவிற்கு டி. இமான் பாடி ஆடி அசத்தினார்.
சக நடுவர்கள் ஆன சித்ரா மற்றும் மனோ ஆகியோர் மிகவும் வியந்து பாராட்டியதுடன் சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டு மழை பொழிந்தனர்.
ஏற்கனவே, அனைவராலும் விரும்பப்பட்ட அவரது பப்ளியான உடல் அமைப்பை மாற்றி ஒரு ஹீரோ போல வலம் வந்து கொண்டிருப்பவரை, இன்றைய நிகழ்ச்சி நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பலாம். கடந்த 15 வருடங்களில் இசையமைப்பாளர்களாக இருந்து வெற்றிகரமான கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் வரிசையில் அடுத்தது இவர்தான் டா என்று கோடம்பாக்கத்தில் இன்று பலரும் பல உதவி இயக்குனர்களும் கதை எழுத ஆரம்பித்து இருப்பார்கள்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 எபிசோடில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஸ்ரீ வர்ஷினி குரலில் சொல்வதாக இருந்தால், இமான் bro … ஹீரோவா நடிங்க ப்ரோ…
பி.கு. புகைப்படம் தொலைக்காட்சியில் எடுக்கப்பட்டது