a K Vijay Anandh review
ஆக, இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் நடைபெறும் சங்கிலிப் பருப்பு தாலி அறுப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு ராபர் படம் வெளியாகி இருக்கிறது.
பொதுவாகவே தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு சமூக அக்கறை நிறைந்து காணப்படும். அதிலும் பத்திரிகையாளராக இருந்து தயாரிப்பாளராக மாறும்போது அது இன்னும் கொஞ்சம் தூக்கலாக தானே இருக்கும்! பத்திரிக்கையாளர் எஸ் கவிதா முதல் படமாக ஏனோ தானோ என்று ஒரு பொழுதுபோக்கு சினிமாவை எடுத்திருக்கலாம். ஆனால், தமிழகத்தில் வாடிக்கையாகி போய்விட்ட சங்கிலி பறிப்பு மற்றும் தாலி அறுப்பு ஆகியவற்றையும் மையப்படுத்தி அதனால் எப்படி இளைஞர் சமூகம் சீரழிகிறது அதைவிட அதிகமாக சிறுமிகள் முதல் வயதான பெரிய பெண்கள் வரை எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் எப்படி உடைந்து போகிறார்கள் என்பதையும் ராபர் படம் மூலம், மிரட்டலாக சொல்லி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார், இயக்குனர் எஸ் எம் பாண்டி மற்றும் சக தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து.
மெட்ரோ சத்யா, கார்ப்பரேட் கம்பெனியில் பார்ட் டைம் ஆக வேலை பார்த்துக் கொண்டே , முழு நேர வேலையாக சங்கிலி பறிப்பு மூலம் எப்படி மிருகத்தனமாக மாறி பெண்களுக்கு மிகப்பெரிய கொடுமைகளை இழைக்கிறார் என்பதை, நிஜ திருடனைப் போல தத்ரூபமாக நடித்துக் காட்டியிருக்கிறார்.
இன்னொரு பக்கம் குறிப்பிட்ட ஏரியாவையே கட்டியாளும் , மிகப்பெரிய திருடனாக டேனியல் போப், இந்த படத்தில், இவர் அதிகம் கவனிக்கப்படும் அளவிற்கு கதாபாத்திரம் சிறப்பாக செய்திருக்கிறார்.
சென்ராயன், கதை சொல்வதாக ஆரம்பித்து பின்பு இறுதிக்காட்சியில் கதையோடு இணைந்து பயணிக்கும் திரைக்கதை அழகு.
மகளைப் பறிகொடுத்த தந்தையாக ஜெயபிரகாஷ் பொங்கும் இடங்கள் அருமை, இவரைப் போன்று பாதிக்கப்பட்ட பெற்றோர்களை நினைத்து கண்ணீர் விடத் தோன்றும் கதாபாத்திரம்.
தீபா, படங்களுக்குப்படம் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவருக்கு இந்த படத்திலும் மிகவும் பொறுப்பான ஒரு அம்மா வேடம்.
தமிழகத்திற்கு இன்றைய தேதியில் இப்படிப்பட்ட அம்மாக்கள் தான் நிறைய தேவை என்று பிரார்த்தனை செய்யும் அளவிற்கு அற்புதமாக நடித்து கண்களை குலமாக்கி இருக்கிறார்.
ராபர், ரசிகர்களின் மனதையும் திருடுவான்!