a K Vijay Anandh review
எதற்குமே கோபப்படாதவர்கள் இருக்கிறார்கள், எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்கள் இருக்கிறார்கள், இதற்கெல்லாமா கோபப்படுவார்கள் என்பவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கதையில் வரும். அபிஷேக் ஜார்ஜ் இன் கோபம் அதனைத் தொடர்ந்து அவர் செய்யும் பழிவாங்குதல்கள் நியாயமானது தானா என்பதை ரசிகர்கள் டெக்ஸ்டர் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அநியாயமாக காதலி யுக்தா பெர்வியையை பறிகொடுத்து விட்டு, அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியாமல் கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கும் நிலைக்குச் சென்று நண்பர் உதவியால் மீளும் நாயகன் ராஜீவ் கோவிந்த் ஒரு பக்கம் …
சிறுவயதில் தொலைத்துவிட்ட அண்ணனை தேடி அலையும் சித்தாரா விஜயன் இன்னொரு பக்கம்….
தனது மகளை இவர்களது மகன்தான் கொன்றான் என்று நம்பி அவன் வரும்வரை வீட்டு சிறையில் வைத்திருந்து சித்திரவதை செய்யும் ஹரிஷ் பெர்டி மறுபக்கம்…
இந்த மூன்று கோடுகளும் இணையும் புள்ளியில் அவர்களை கொடூரமாக கொல்ல காத்திருக்கும், அபிஷேக் ஜார்ஜ் என்று திரைக்கதையில் மிரட்டி இருக்கிறார் இயக்குனர் சூரியன் ஜி.
பொதுவாக நாயகியை பறிகொடுத்து விட்டு நாயகன் தனிமையில் இருக்கும் நிலையில் வந்து ஒட்டிக் கொள்ளும் ஒரு பெண் அவரை காதலிக்க ஆரம்பிப்பது தான் சினிமா வழக்கம். ஆனால் என் அண்ணனுடன் படித்தவர் ஆகவே இவர் எனக்கு அண்ணன் என்று அவர் பழக ஆரம்பிப்பதே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய டுவிஸ்ட் என்றால் மிக ஆகாது.
ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த அனைவருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அஷ்ரப் குருக்கள் மற்றும் கே டி வெங்கடேஷ் ஆகியோர் அமைத்திருக்கும் சண்டை காட்சிகள் விறுவிறுப்பான ரகம்.
மிகவும் எளிமையான அதேசமயம் ஊகிக்க முடியாத கதையாக இதனை எழுதி இருக்கிறார் சிவம்.
டெக்ஸ்டர், சாதாரணமாக ஆரம்பித்து மிரட்டலாக முடியும் விறுவிறுப்பான திரைக்கதை.