– K Vijay Anandh
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரவிற்கும் ரெட்ரோ திரைப்படம் அவரது இயக்கத்தில் 13வது படம், ஆனால், ஒரு நடிகராக அவரது தந்தை கஜராஜ் க்கு நூறாவது படம்.
இதில் மிகப்பெரிய சுவாரசியம் என்னவென்றால் கஜராஜை நடிகராக திரைப்படத்துறைக்குள் அறிமுகப்படுத்தியது கார்த்திக் சுப்புராஜ் தான். ஆம் ஆம் அவர் இயக்குனராக அறிமுகமான பீட்சா படத்தில், தனது தந்தையையும் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தார்.
அதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக வில்லனாக அரசியல்வாதியாக மருத்துவராக என்று பல கதாபாத்திரங்களை ஏற்று, இந்த 13 வருடத்தில் நூறாவது படத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் கஜராஜ்.
அவரது இயல்பான நடிப்பும், கரகர வென்ற கம்பீரமான மதுரை தமிழ் இழையோடும் வசன உச்சரிப்பும் அவரது பெரிய பலம். ஒரு முழு நீளப்படத்தில் இரண்டு – மூன்று காட்சிகளே தோன்றினாலும் ரசிகர்கள் மனதில் பதிந்து விடும் ஆற்றலும் நிறைந்த நடிகராக கஜராஜ் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிகராவதற்கென்றே தனது மகனை இயக்குனர் ஆக்கினாரா ? தவமிருந்து ஒரு இயக்குனர் மகனை பெற்றாரா ? என்கிற தலைப்புகளில், விவாதங்களே நிகழ்த்தலாம்.
மகன் இயக்குனராக தனது படத்தில் தந்தையை நடிகராக அறிமுகப்படுத்தி அந்த தந்தை 100 படங்களை தொட்டிருக்கிறார் என்ற செய்தியை மிகவும் அரிதிலும் அரிதாக இருக்கின்றது என்றால் மிகையாகாது. உலகின் மிகப்பெரிய சினிமா துறையான இந்திய சினிமாவிலும் ஒட்டுமொத்த அளவில் சர்வதேச சினிமாவிலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமா என்பது சந்தேகமே.

நேற்று நடைபெற்ற ரெட்ரோ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகர் ஆன சிவகுமார் கைகளால் 100 படங்களை தொட்டிருக்கும் கஜராஜ் பரிசு வாங்கிக் கொண்டார். அந்த தருணத்தில் தானே ஆஸ்கார் விருது வாங்கியது போன்ற உணர்வுடன் மிகவும் சந்தோஷமான கார்த்திக் சுப்புராஜ் ஐ காண கண் கோடி வேண்டும் தன்னை அறிமுகப்படுத்திய தனது மகன் கார்த்திக் சுப்புராஜ் கும் ரெட்ரோ படத்தில் தனக்கு வாய்ப்பு வழங்கிய 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தாருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். அத்துடன் படப்பிடிப்பின் போது சக நடிகர்களின் பாதுகாப்பில் எவ்வளவு அக்கறையாக சூர்யா செயல்படுவார் என்பதையும் குறிப்பிட்டார். அந்தமான் கடலில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அவர் நின்ற படகு காற்றில் அடித்துச் செல்ல இருந்த நிலையில் சூர்யா ஓடிவந்து கயிற்றை பிடித்து இழுத்து காப்பாற்றி இருக்கிறார்.
