– K Vijay Anandh
2D என்டர்டைன்மென்டும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து மிகவும் பிரமாண்டமாக சூர்யாவின் பொற்காலங்களை திரும்பக் கொண்டு வரும் படமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம் இருக்கப் போகிறது என்றால் மிகை அல்ல.
மூன்று நான்கு மாதங்களுக்கு முன் இதே நேரு அரங்கம், சூர்யாவின் இன்னொரு படம். அந்த படம் வெளியான நிலையில் படத்தைப் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் என்று இல்லாமல் தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளங்களில் அவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருந்தது. அப்படி ஒரு நிலையில் அதே நேரு ஸ்டேடியத்தில் சூர்யாவின் ரெட்ரோ பட விழா, முன்பை விட அதிக வீரியத்துடன் ரசிகர்களின் மூன்று நான்கு மணி நேர இடைவிடாத கரகோஷங்களுடன் வாழ்த்துக்களுடன் நடந்தது என்றால், இது, இவரைத்தவிர இன்னொரு நடிகருக்கு சாத்தியமா என்பது நிச்சயம் கேள்விக்குறிதான்.
ஐந்து மணி முதலே அரங்கை நிறைத்து விட்ட ரசிகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மிகச் சரியாக ஏழு மணிக்கு ஆரம்பித்த விழா, நான்கு மணி நேரம் போனதே தெரியாமல் ரசிகர்களின் மிகப்பெரிய ஆரவாரத்திற்கு மத்தியில் நடந்தது.
“ஜாதகம் பார்த்த ஜோதிடர் இவன் நடிகனாக வருவான் என்று சொன்னபோது வீட்டில் யாருமே நம்பவில்லை. ஆனால், அந்த வாக்கின்படி இன்று மிகச்சிறந்த நடிகராக, அவனது கண்களால் பல்லாயிரக்கணக்கான பெண் ரசிகைகளை கவர்ந்து வைத்திருக்கக்கூடிய நடிகனாக இன்று என் மகன் சூர்யா இருக்கிறான்” என்று சிவகுமார் பேசிக்கொண்டிருக்கும் பொழுது லேசாக கண் கலங்கினார் சூர்யா.
விழாவில் பேசிய நாசர், ” சூர்யாவின் முதல் படத்திலிருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சூர்யா ஒரு அற்புதமான கலைஞன். என்றைக்கு அவர் நடிகனாக உருவானாரோ அதிலிருந்து அவர் ஒரு குடும்பத்தின் சொத்து மட்டும் அல்ல எங்களது சொத்து நமது சொத்து…. அதை மனதில் வைத்து சண்டை காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுக்காமல் மிகவும் கவனமாக நடிக்க வேண்டும் .. ” என்று கேட்டுக் கொண்டார்.
சூர்யா தமிழ்நாட்டில் இருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று பலரும் குறிப்பிட்டனர். குறிப்பாக ரெட்ரோ படத்தை ஹிந்தியில் வெளியிடும் விநியோகஸ்தர். “தமிழ் சினிமாவில் எனக்கு சூர்யா மட்டும்தான் தெரியும்…” என்று தெரிவித்த பொழுது அரங்கம் அதிர்ந்தது.
RETRO தலைப்பிற்கு ஏற்றவாறு இந்த படம் சூர்யாவின் மகிழ்ச்சியான வெற்றிகரமான காலகட்டத்தை திரும்ப கொண்டு வந்து அவருக்கு REINTRO கொடுக்கும் படமாக அமையட்டும். சூர்யா, தனது அகரம் அறக்கட்டளை மூலமாக ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கிய நல்ல மனிதன், நல்ல நடிகன். அவர் இன்னும் நிறைய படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கட்டும்.
சூர்யா / கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன், பிரேம் , தமிழ், விது மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் பேசிய முழு வீடியோவும் நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்ட பாடல்கள் மற்றும் நடனங்களும் கீழ்கண்ட youtube லிங்கில் இருக்கின்றது பார்த்த மகிழுங்கள்.
https://www.youtube.com/live/99aF1cR9rO8?si=4LAjteS7Yr-Rkj6t

