லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்தின் டிரையலர் நேற்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வெளியானது.
அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுபின், சார்லி ஸ்ருதிஹாசன், தமிழ் என்று இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரப்பட்டாளங்களுடன் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்தப்படம் ஆகஸ்டு 14 அன்ரு உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்திய இசையுலகில் கொடிகட்டிப்பறக்கும் இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
பிலோமின் ராஜ் கட்டில் உருவான கூலி படத்தின் டிரையலர் ஒரே நாளில் ஒன்றரை கோடி பேரால் பார்த்து ரசிக்கப்பட்டிருக்கிறது.
ஒரே சூப்பர் ஸ்டார் தானே !