– K Vijay Anandh
KRG குழும தலைவரும் திரைப்படத்தயாரிப்பாளரும் சமீபத்தில் திமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டு சம்பந்தியுமான கண்ணன் ரவி, தனது பேங்க் பேங்க் படக்குழுவினருடன் பத்திர்கையாளர்களை சந்தித்தார்.
அவரைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அதிரடியாக விளக்கம் கொடுத்த கண்ணன் ரவி, ”என்னைப்பற்றி குறிப்பிட்ட அத்தனை அவதூறுகளையும் நிரூபித்தால், நிரூபிக்கும் ஒவ்வொருவருக்கும் 5 கோடி வழங்குகிறேன்” என்றார்.
1990 களில் இருந்து சம்பாதிக்க ஆரம்பித்தேன், இன்று நிறைய சம்பாதித்து கொண்டிருக்கிறேன், அதில் ஒரு பகுதியை என் மக்களுக்கும், என் ஊருக்கும் நல்லது செய்ய பயன்படுத்துகிறேன். அத்துடன் நான் மிகவும் நேசிக்கும் திரைத்துறையிலும் முதலீடு செய்கிறேன்… சிறிய படங்களாக ஆரம்பித்து பெரிய பெரிய படங்கள் தயாரித்துக்கொண்டே இருப்பேன்… வெளிநாட்டில் சம்பாதித்து, சொந்த நாட்டில் முதலீடு செய்ய வருபவர்களை வரவேற்காவிட்டாலும், விரட்டாமல் இருங்கள்… என்னிடம் இருப்பது தவறான பணம் என்றால், நான் ஏன் இந்தியாவுக்கு வருகிறேன்..? சத்தமில்லாமல் பல வெளிநாடுகளில் முதலீடு செய்துகொண்டு ஜாம் ஜாம் என்று வாழ்ந்துவிடலாமே..” என்றவர் ” ச்ம்பாதித்த பணத்தை ட நாமாக கொடுக்கவில்லையென்றால் அது தாமாக வெளியேறிவிடும்..” என்று அழுத்தம் திருத்தமாக பேசினார்.
பினாமியாக இருப்பவர்கள், அவர்களின் பசிக்கு கூட அவர்கள் வைத்திருக்கும் காசை பணத்தின் சொந்தக்காரர்கள் அனுமதி இல்லாமல் எடுக்க முடியாது என்பது தான் உண்மை. அப்படி இருக்கும் போது, கண்ணன் ரவி, மற்றவர்களுக்கு உதவுவதற்காக தாராளமாக செலவு செய்கிறார் என்றால், அது நிச்சயமாக அவரது வியர்வையில் உருவான பணமாக தான் இருக்கமுடியும்.
ஏன் உள்ளூரில் ஆடம்பரமாக திருமணம் செய்தீர்கள் என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டபோது, ” மோடி மக்களுக்காக பல்வேறு அறிவுரைகளை வழங்கிவருகிறார். அதில், டிஸ்டினேஷன் மேரேஜ் எனப்படும் வெளி நாட்டில் நடத்தப்படும் திருமணங்களை தவிர்க்கவும், உள்ளூரிலேயே திருமணங்களை நடத்தவும் சொல்லியிருக்கிறார். அந்தப்பணம், நமது உள்ளூர் வியாபாரிகள் மக்களுக்கு சென்றடையும். இன்று நான் பல கோடி செலவு செய்து என் மகனுத்திருமணம் நடத்தியிருக்கிறேன் என்றால், அதன் மூலம் எத்தனை உள்ளூர் வியாபாரிகள், சமையல்காரர்கள், பந்தல் அமைப்போர் உள்ளிட்ட பலருக்கும் அது வருமானத்தை கொடுத்திருக்கும்..
ஆடம்பரம்… ஆம்., என் மகனுக்கு நான் செய்யாமல் யார் செய்வது..? நான் சம்பாதித்த காசை என் மகனுக்கு செய்யாமல் எப்படி..? என்றார்.
Watch Full Video https://www.youtube.com/watch?v=dvKgxTExW8A
திராவிட கட்சிகளை சேர்ந்தோர் வைக்கும் விமர்சனத்திற்கு, அவர்களின் கன்னத்திலேயே அறைவது போல பதிலளித்த கண்ணன் ரவி, ” ஆமாய்யா.. நான் இந்து அப்படித்தான் ஐயர்களை வைத்து என் இந்து வைதீக முறைப்படி திருமணம் செய்வேன்… என் மகளுக்கும் அப்படித்தான் செய்வேன்.. இதனை பெண்ணை கொடுத்த துரைமுருகன் வீட்டார் கேட்டுக்கொண்டபோதே தெளிவுபடுத்திவிட்டேன்.. ஐயர்களுடன் போட்டி போட பல நல்ல விஷயங்கள் இருக்கிறது.. அதை விட்டுவிட்டு இதையெல்லாம் விமர்சித்து கொண்டு இருக்காதீர்கள்..” என்றார்.
திராவிடப்பாரம்பரியத்தில் சம்பந்தம் வைத்துக்கொண்டு தேசியத்தின் பால் அதீத காதல் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, ” ஆம்.. இந்தியா என் தேசம்… இது வளமான தேசம்… உலகிலேயே அதிகளவில் இளைஞர்களை கொண்ட தேசம்… முதல் பல்கலைக்கழகம் ஆரம்பித்த தேசம்.. உலகிற்கு வளங்கள் , அறிவு என்று எல்லாமே கொடுத்த தேசம்… என் தேசத்தை எப்பொதும் பெருமைப்படுத்துவேன்..” என்றார்.
மகனை எப்போது ஹீரோ ஆக்குவீர்கள் என்று கேட்டதற்கு, ” அவர், தீபக் ரவி விரும்பினால் அவரை வைத்து 25 படங்கள் தயாரிக்க ரெடி.. அதுவும் புதுமுக இயக்குனர்களை வைத்து..” என்றார்.
கண்ணன் ரவியை விமர்சிக்கும் திராவிட ஆட்கள் யாரும், வெளிநாட்டில் பலகோடி செலவில் தன் மகளுக்கு திருமணம் செய்துவைக்கப்போகும் மாறன் குடும்பத்தினரை பற்றி வாய் திறக்கப்போவதில்லை. மாப்பிள்ளை வீடு ஆச்சாரமான ஐயர் வீடு, சமஸ்கிரத மந்திரங்கள் இல்லாமல் திருமணம் நடந்துவிடுமா என்ன..? இந்த திராவிட கரப்பான் பூச்சிகளின் தொல்லை இருக்கவேண்டாம் என்று தானே மாறன் குடும்பம் தனி பிளைட் புக் செய்து புரோகிதரை கிரீஸ் நாட்டிற்கு அழைத்து செல்கிறது!
சென்னை 28 படத்தில் ஒரு வசனம் வரும், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா அணியினர் , சிறுவர்களின் எதிர்நோக்கி பவுலிங் போடும் போது அவர்கள் எல்லா பந்துகளையும் சிக்சருக்கு பறக்க விட, ” இவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு எந்த பந்து போட்டாலும் அடிக்கிறான் டா..” என்று புலம்புவார்கள். அது மாதிரி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கேட்கப்பட்ட அர்த்தமுள்ள அர்த்தமில்லாத அத்தனை கேள்விகளையும் ஒரே மாதிரியாக பாவித்து, முகத்தில் ஒரு நிரந்தர புன்னகையுடனே அசால்டாக பதிலளித்தார் கண்ணன் ரவி.
