VK @ Victory King

World First Autobiography by AI

109

a K Vijay Anandh review

ஆருத்ரா தரிசன நாளில், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் தொழில்நுட்பம் மூலம் படைக்கப்பட்ட முதல் சுயசரிதை படம் என்கிற பெருமையை பெற்றிருக்கும், வி கே என்கிற விக்டரி கிங், மூவேழு பாகங்கள் கொண்ட இந்த சுயசரிதையில், கதை மாந்தர்களாம் வி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பத்மாவதி ஆகியோரின் திருமண நிகழ்வை பார்க்க நேர்ந்தது.

பொதுவாக, புகைப்படங்கள் இருந்தால் AI தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக அந்த கதாபாத்திரங்களை அசைய வைத்து வீடியோக்களை உருவாக்க முடியும். 1968 இல் நடைபெற்ற இவர்களது திருமண வைபவத்தை பொருத்தவரை புகைப்படமோ வீடியோ வோ எதுவுமே இல்லாமல் நடந்திருக்கிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில், அப்பா அம்மாவின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் அவர்களின் திருமண வைபவத்தை அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் இந்த ஆட்டோ பயோகிராபியை எழுதி இயக்கியிருக்கும் காம்கேர் கே புவனேஸ்வரி.

1990களில் வெளியான காதல் கோட்டை படத்திற்கு பிறகு இன்று வரை, காதலில் கடித போக்குவரத்து கூட காணாமல் போய்விட்டது. இவர்களின் காதலோ அதற்கும் 20 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அன்றைய காலகட்டத்தில், இந்த கதையின் நாயகன் விருத்தாசலத்தில் பணியாற்றிய பொழுது அங்கிருந்து செல்லும் அத்தனை வெளியூர் தொலைபேசி  இணைப்புகளும், சென்னை மற்றும் கடலூர் வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என்கிற நிலையில், அவ்வளவு அடர்த்தியான தொலைபேசி அலைக்கற்றைகளுக்கு நடுவில், நிதானமாக பூத்திருக்கிறது இவர்களது காதல் மலர்.

அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ரீலிலும் ஒரு பாடல் ஆவது இருக்கும், தனது பெற்றோரின் திருமண காலகட்டத்தை அப்படியே பதிவு செய்ய நினைத்த காம்கேர் கே புவனேஸ்வரி, நிறைய பாடல்களையும் இந்த ஆட்டோ பயோகிராபியில் இணைத்திருக்கிறார். அதுவும் இவரே எழுதி இசையமைத்து, 20 நிமிடங்களுக்கு மேல் ஓடும் ஆட்டோ பயோகிராபி விறுவிறுப்பாக செல்லும் அளவிற்கு அற்புதமாக இணைத்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், திருமண நிகழ்வுக்கே உரிய உறவினர்களின் உரையாடல்கள் கேலி கிண்டல்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுகள் என்று மிகவும் நேர்த்தியாக இந்த ஆட்டோ பயோகிராபி படமாக்கப்பட்டிருக்கிறது.

தங்களது பெற்றோர்களின் பால்ய மற்றும் இளமை காலங்களை நினைவுபடுத்தி அவர்களுடன் உரையாடி மகிழ்வதே அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும் என்கிற நிலையில், காம்கேர் கே புவனேஸ்வரியோ, அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டங்களையும் அற்புதமாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி, திரைப்படமாகவே எடுத்திருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இன்று ஒவ்வொருவர் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன் வாயிலாக இணையத்தில் கொட்டி கிடக்கும் ஏ ஐ தொழில் நுட்பங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் வீடியோக்களை உருவாக்கி விட முடியும் என்கிற நிலையிலும், கம்ப்யூட்டர் துறையில் முன்னோடியான காம்கேர் கே. புவனேஸ்வரி, தனது சொந்த ஆராய்ச்சிகளின் மூலம் உருவான ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த முழு நீள ஆட்டோ பயோகிராபியை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதனையாளர்கள் என்று ஆட்டோ பயோகிராபி, லட்சத்தில் ஒருவருக்கு தான் கோடியில் ஒருவருக்கு தான் எடுக்கப்பட வேண்டும் என்பது அல்ல. நமது பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்கள் ஒவ்வொருவரும் சாதனையாளர்களே!  அவர்களது வாழ்க்கை முறைகளில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கும் நமது எதிர்கால சந்ததியினர்கள் கற்றுக் கொள்வதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில், காம்கேர் கே புவனேஸ்வரியின் இந்த அரிய  மற்றும் அற்புதமான முயற்சி, பலருக்கும், தங்களது பெற்றோர் ஒரு உந்துதலாக இருக்கும் என்றால் மிகையாகாது.

Compcare K Bhuvaneswari