I, Nobody

4/5

29

a K Vijay Anandh review

16 கோடி ரூபாய் ஒரு வங்கியில் கொள்ளை போகிறது. அது பழைய கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட பிரிதிவிராஜ் வீட்டில் இருக்கிறது .

இப்பொழுது இடைவேளை.

என்ன நடந்தது என்று தெரியாத அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்கிறது.

பிரச்னைகளில் இருந்து தப்பிக்க,  தன் மகளை வைத்து ஒரு கடத்தல் நாடகத்தை ராஜீவன் அரங்கேற்ற , அதன் விளைவு கேரள முதல்வர் வரை போகிறது. நடந்தது என்ன என்பதே படம்.

நிறுத்தி நிதானமாக நகர்கிற நீண்ட  படம்,

ராஜீவனின் குடும்ப சூழல், அவனை உலகம் பார்க்கும் பார்வை , கடன் அடைக்க போராடும் ஒருவர் பணம் திருட  முயல்வது என்று நிறைய வித்தியாசமான வினோதமான சூழல்கள் சமீர் அப்துல்  எழுத்தில் . சபாஷ் அப்துல்.

கணவன் மனைவிக்கு இடையேயான காட்சிகளை  உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார்   நிஸாம் பஷீர். காட்சியமைப்புகளும் ஆழம் .

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். ஜேக்ஸ் பிஜாய் இசையும் அப்படியே .

அற்புதமாக நடித்துள்ளனர் பிரித்வியும் பார்வதியும்.

சற்றே இருண்மையான கேரக்டரில் கச்சிதமான நடித்துள்ளார் பூ பார்வதி. மனைவியை மன்னிக்கிறோமா தண்டிக்கிறோமா என்று தனக்கே புரியாத கேரக்டரில் பிரித்வி அழகாக பொருந்திப் போகிறார்.

மூத்த மகள் ஜியாவாக நடித்துள்ள நக்ஷத்ரா, அந்த குட்டி செல்லம் இருவரும் இரண்டு கவிதைகள்

முண்டியடித்து முன்னால் தெரியும்  முகத்தோடு  ஹக்கீம் ஷாஜகான் கவர்கிறார் . இயக்குனர் பாசிலின் ஜாடையில் இருக்கும் அசோகன் நல்ல நடிப்பு.

ஒரு தனி மனிதனின் பிரச்சனை எப்படி கொள்ளை , மக்களின் பண வெறி, கொள்ளையர்களை விட மோசமான அரசியல் கொள்ளையர்கள் என்று விரிந்து முடிகிறது.

ஐ, நோபடி, they re everybody என்று சொல்லும் அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார்கள்.