அனஸ்வரா மாதிரி பெண் வேண்டும் – மோகன் ராஜா

With Love from Feb 6

51

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

வித் லவ் பட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் …

உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி…

இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பம் போல இருந்த குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.எடிட்டர் சுரேஷ்……

வித் லவ் படத்தில் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது மதன், வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. படம் அருமையாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி
ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா….
இப்படத்தின் கதையை மிக அழகாக ஸொன மதனுக்கு நன்றி. கதை சொன்னபோது மறுக்கவே தோணவில்லை. திரையிலும் மிக அழகாக வந்துள்ளது. தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம், மகேஷ் இருவருக்கும் நன்றிகள். அபிஷந்த், அனஸ்வரா, மற்றும் நடிகர் குழுவிற்கு நன்றி. படத்தை எடுக்கும் போது ஸ்கூல் நினைவுகள் எல்லாம் வந்தது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

 

பாடலாசிரியர் மோகன்ராஜன் .
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சௌந்தர்யா மேடம் பாடல் எல்லாம் நன்றாக வந்துள்ளது என சொன்னார்கள். நன்றி. அபி முதன் முதலில் டூரிஸ்ட் ஃபேமிலி படக்கதை சொன்ன போதே வியந்தேன் அவர் சீக்கிரமே ஹீரோவாக மாறுவார் என நினைத்தேன் ஆனல் அடுத்த படத்திலேயே ஆகிவிட்டார். மதனை டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு முன்பிருந்தே தெரியும். அவர் ரசனையும் என் ரசனையும் ஒன்றாக இருக்கும். இப்படத்தில் உமா தேவி ஒரு பாடல் எழுதியுள்ளார் அதுவும் நன்றாக வந்திருக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் எனக்கு ஷான் ரோல்டன் இசையில் அற்புதமான பாடல்கள் அமைந்துள்ளது. அவருடன் மீண்டும் மீண்டும் வேலை பார்க்க ஆசைப்படுகிறேன். புது முயற்சியாக இந்த படத்தில் ஒரே மெட்டுக்கு ஆணின் கோணத்திலும் பெண்ணின் கோணத்திலும் ஆக பாடல் அமைந்துள்ளது. பெண்ணின் கோணத்தில் வரும் பாடலை உமாதேவி எழுதி இருக்கிறார்.
படம் பார்க்கும் எல்லோரும் .. ஏன்… எனக்கும் இப்படி அனஸ்வரா மாதிரி பெண் கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைப்பார்கள். அற்புதமாக நடித்திருக்கிறார். இப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

 

என்றனர்.