நிகில் முருகன், 600*

24

இவர் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றும் படங்களின் மேடைகளில், இவரது குரல் தான் ஓங்கி ஒலிக்கும். படங்களை வேண்டுமானால் நீங்கள் டைரக்ட் பண்ணிக் கொள்ளுங்கள், அந்தப் படங்களில் நீங்கள் டைரக்டர்ஸ் சொல்வது போல நடித்துக் கொள்ளுங்கள், ஆனால் நான் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றும் படங்களின் மேடைகளில், உங்களுக்கு பொசிஷன் கொடுப்பதும் நான் தான், உங்களை இயக்குவதும் நான் தான் என்று நேர்த்தியாக ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் நடத்துவதில் இவருக்கு நிகர் இவர் தான் எனும் அளவிற்கு நிகில் முருகன், ஒரு முன்னணி பத்திரிகை தொடர்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

பத்திரிகை தொடர்பு என்பது மிகவும் சவாலான ஒரு பணி, திரைப்பட விழாக்களில் நடக்கும் நிகழ்வுகளை பத்திரிக்கையாளர்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மிகச் சிறந்த ஒரு கலை. அதில், யாரை எங்கே அமர வைக்க வேண்டும் என்பதிலிருந்து, அனைவரையும் ஒருங்கிணைத்து புகைப்படங்கள் எடுக்க வேண்டிய அவசியம் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் பத்திரிகை தொடர்பாளர்களின் முன்னோடி இந்த நிகில் முருகன் என்று சொன்னால், மிகையாகாது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துறையில் கோலோச்சி கொண்டிருக்கும், நிகில் முருகனுக்கு, லெஜன்ட் சரவணன் நடிப்பில் வெளியான லீடர் 600 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

600 ஆவது படம் என்கிற மைல்கல்லை லீடர் படம் மூலமாக எட்டிப் பிடித்து விட்டாலும், ஒளிப்பதிவாளர் செழியன் தொடங்கிய 34 படங்கள் உட்பட, நிகில் முருகனின் கையில் இன்னும் பல படங்கள் இருக்கின்றன அவை வரிசையாக வெளிவர காத்திருக்கின்றன.

விழாக்களுக்கு வரும் விருந்தினர்கள் கூட அந்த விழா நடந்து முடியும் வரை ஒரே காஸ்ட்யூம் இல் தான் இருப்பார்கள், ஆனால் நிகில் முருகன் தனது உடைகளை மாற்றிக் கொண்டே இருப்பார். அவர் ஒரு குறிப்பிட்ட கெட்டப்பில் மாறிவிட்டார் என்றால் நிகழ்ச்சி தொடங்கப் போகிறது என்று அர்த்தம் என்று மூத்த பத்திரிகையாளர்கள் குறிப்பிடுவார்கள்.

இந்த வேகத்தில் பயணித்தால் இன்னும் சில வருடங்களில் ஆயிரம் எனும் இலக்கை எளிதாக எட்டிப் பிடித்து விடுவார், நிகில் முருகன், வாழ்த்துக்கள் அவருக்கும் அவரது உதவியாளர்களுக்கும்!