a K Vijay Anandh review
ஓர் உயிர் , ஈர் உடல் என்று சொல்வார்கள் அதனை இந்த படத்தில் நிஜமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி.
காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை ரேஷ்மா வெங்கடேஷ் ஆகவும் மாலை 6:00 மணி முதல் காலை 6 மணி வரை சந்தோஷ் ஆகவும் முழுமையாக பெண் மற்றும் ஆண் உருவம் எடுத்து அட்டகாசப்படுத்தி இருக்கிறார்கள் .
இந்த படத்தை ஏசிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு பிளாஸ்ட் என்று சொன்னால் அது மிகையல்ல. பிளாஸ்ட் போல காட்சிக்கு காட்சி சண்டைகள் இல்லாவிட்டாலும், சந்தோஷம் ரேஷ்மா வெங்கடேசும் சம்யுக்த விஸ்வநாதன் மற்றும் வினோத் கிஷன் மீது காதல் வயப்படும் பொழுதிலிருந்து தொற்றிக் கொள்ளும் சுவாரசியம் இறுதி காட்சி வரை நீடிக்கிறது.
அதிலும் சரியாக 5 55 நொடிகளில் இருந்து வினோத் கிஷன் ரேஷ்மா வெங்கடேஷுக்கு உதட்டோடு முத்தம் கொடுக்க ஆறு மணிக்கு அவர் சந்தோஷமாக மாறும் காட்சி ரசிகர்களுக்கு புதிய விருந்து.
சரி இவர்களுக்கு ஒரு முத்த காட்சி வைத்து விட்டோம் சம்யுக்தாவுக்கும் ரேஷ்மா வெங்கடேசுக்கும் ஒரு முத்த காட்சி வைத்து விடுவோம் என்று சந்தோஷில் ஆரம்பிக்கும் முத்தம் ரேஷ்மா வெங்கடேசாக முடியும் காட்சி இன்னொரு வெடி.
சரியாக ஆறு மணிக்கு சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ் உடலில் இருந்து தான் வருகிறார் என்று அறிந்து கொள்ளும் விடிவி கணேஷ், மற்றும் சந்தோஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் உணர்வு பூர்வமாக பணமாக்கப்பட்டிருக்கின்றன.
ஆண் பெண் ஆணாக இருந்து பெண்ணாக மாறுவது பெண்ணாக இருந்தாலும் ஆடுவது அல்லது ஒரே உடலில் ஆண் மற்றும் பெண் உறுப்புகள் அமைந்து காணப்படுவது என்ற கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஒரு ஆணும் அதே இதயத்துடன் ஒரு பெண்ணும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த திரைக்கதை, நிஜத்தில் எந்த அளவுக்கு சாத்தியம் சாத்தியம் இல்லை என்று யோசிக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பான பொழுதுபோக்கை தந்திருக்கிறது .
பகல் பார்க்காத சந்தோஷ் பௌர்ணமி பார்க்காத ரேஷ்மா என்று இருவரும், போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். திடீரென்று பெண் ஆணாகவும் ஆண் பெண்ணாகவும் மாறும் நிலையில் அவர்களுடைய உடை அப்படியே தொடர்வது ஒரு சுவாரசியமான காட்சி அமைப்பாக அமைந்துவிட்டது.
இன்னொரு பக்கம், இவர் நடித்தாலே நல்ல கதை பாத்திரமாக தான் இருக்கும் என்று ஏற்கனவே பெயர் வாங்கி விட்ட வினோத் கிசன், இந்த படத்தில் ஒரு முழுமையான கதாநாயக அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார் அல்லது உயர்த்தப்பட்டிருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பாக அவருக்கு கிடைத்த கதாபாத்திரத்தை நடித்து என் வழி தனி வழி என்று நிரூபித்திருக்கிறார்.
சம்யுக்தா, அலட்டிக் கொள்ளாத பேரழகு. அவசரமாக ஒரு இதயம் வேண்டும் என்று அவர் அப்பாவிடம் சொல்லும் ஒரு காட்சி போதும், அவரது கெத்தில் ரசிகர்கள் சொக்கிப் போகப் போவது உறுதி.
இன்னொரு பக்கம் வில்லனாக பகவதியும் அவரிடம் பணியாற்றும் விச்சு விஸ்வநாத்தும் பயமுறுத்தி இருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புது உடல் மொழி காட்டி பகவதி ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்.
தொழில் ரீதியாக சாம் சி எஸ் இன் இசை மற்றும் சாந்தகுமார் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவு ஆகியவற்றை விட பிரவீன் ஆன்டனியின் எடிட்டிங் இந்த கதைக்கு மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.
இந்த டபுள் ஆக்குபன்சி, கதையை நாம் சுவாமி ஐயப்பனின், பிறப்பில் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம். சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து பிறந்த பிறப்பு தான் சுவாமி ஐயப்பன். ஐயப்பனை பெற்றெடுக்கும் வரை விஷ்ணு மோகினி அவதாரத்தில் இருக்கிறார். அதன் பிறகு அவர் விஷ்ணுவாக அதாவது ஆணாக மாறி விடுகிறார்.
நமது புராணங்கள் வெறும் கட்டுக் கதைகள் அல்ல அவை அறிவியலுக்கு சவால் விடும் சம்பவங்கள் என்பதாக இந்த படத்தை பார்த்த பிறகு புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த கதையில் கூட 12 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாத, போஸ் வெங்கட் வினோதினி வைத்தியநாதன் தம்பதிக்கு இறையருளால் இப்படி ஒரு குழந்தை பிறக்கிறது என்பதாக காட்சிப்படுத்தி இருக்கும் விதம், கதைக்கு நல்ல ஆரம்பத்தை கொடுத்து விடுகிறது.
மொத்தத்தில் இந்த டபுள் ஆக்குபன்சி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!