a K Vijay Anandh review
வால்ட் டிஸ்னி படங்கள் அல்லது ஹாலிவுட்டின் காமிக்ஸ் படங்கள் போன்ற ஒரு திரையனுபவம், முழுக்க முழ்க்க நம்மூரில் , நமது நடிகர்கள், நமது தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நம்மூருக்கு ஏற்ற கதை என்று அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள்.
அத்துடன் ஒரு சில பொது இடங்கள், காவல் நிலையம், பிளாக் ஹோல் லேப், கதாநாயகி வீடு என்று நான்கைந்து லொகேஷன்கள், ஆறேழு முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துணை கதாபாத்திரஙள் என்று ஒரு காம்பேக்ட் பிலிம் மேக்கிங்குக்குள் பிரமாண்டம் காட்டி அசத்தியிருக்கிறார்கள். பார்க்கும் அத்தனையையும் மினியேச்சர் ஆக்கி அழகு பார்க்கும் நாயகி கதாபாத்திரம் இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
சமீபட்த்தில் சங்ககிரி ராஜ்குமார் எனும் படைப்பாளியால் வெளிவந்த ஒன் மேன் படத்திற்கு அடுத்து, ஒரு மெனக்கெடலுடனான ஒரு பிலிம் மேக்கிங், அதாவது ரசிகனுக்கு ஏதாச்சும் புதிதாக கொடுக்க வேண்டும் என்கிற ஆத்மார்த்தமான உழைப்பு இந்தப்படக்குழுவினரிடம் தெரிகிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஒரே நாளில் 125 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கும் ஜெயிலர் 2 உடன் வெளிவந்திருப்பதே டிரோன்ஸ் குழுவினரின் உழைப்புக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்.
குரைசியின் பிளாக் ஹோல் பரிசோதனைக்கூடத்திற்குள் மாட்டிக்கொள்ளும் கிஸ் டிராவிட் செல்வம் சம்பங்கி உதவியுடன் மினியேச்சர் ஸ்பெஷலிஸ்ட் சித்தி இத்னானியுடன் செய்யும் காதல், ரசிகர்களுக்கு மிகவும் புதிது.
யாரையும் நம்பாதே என்று பேய்க்கிழவியாக தேவதர்ஷினியும் , பேத்தியாக சித்தி இத்னானியும் தனித்தானியாக பிரேமில் எண்ட்ரி கொடுத்து பிரேமுக்கு வெளியே சண்டையிட்டுக்கொள்ளும் போதே புத்திசாலி ரசிகர்கள் ஒன்றை ஊகித்திருப்பார்கள், அதனை கொஞ்சம் தாமதமாகவே கதாநாயகன் டிராவிட் செல்வம் புரிந்துகொள்கிறார்.
காதலும் நிறைவேறாமல், தற்கொலை செய்துகொள்ளலாம் என்றால் சாவும் வராத ஒரு பிறப்பை கற்பனை செய்து பார்க்க இயலுமா ? தேவதர்ஷினி சிறப்பாக நடித்து பயமுறுத்தியிருக்கிறார். கன்னக்குழி அழகிகள் இருவருமே , சரியான தேர்வுகள்!
நாயகனின் நண்பர்களாக வரும் கருப்பட்டி ரஷ் அஞ்சலி நாயர், தஷ் தீபக் மகரந்தன் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருப்பட்டியாக வரும் அஞ்சலி நாயர் ஒரு படி தூக்கலாகவே நடித்து அசத்தியிருக்கிறார். அதிலும், பேய்க்கே கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்து அடக்கும் காட்சியும், நாயகனுக்கு பெப்பே கொடுக்கும் காட்சியும் அட்டகாசம்.
அந்த மினியேச்சர் கான்செப்டை உருவாக்கிய அத்தனை பேருக்கும் பாராட்டுகள். இன்னும் கொஞ்சம் டீடெயில் செய்திருக்கலாமோ என்று தோன்றியது.
அப்படி ஒரு மினியேச்சர் காட்டிற்குள் சிக்கிக்கொள்ளும் இன்ஸ்பெக்டராக அதுவும் தற்போதைய டிரெண்டிங் பெயரில் கூமாபட்டி மாதவனாக நடித்திருக்கும் சினிமா வாலா சதீஷ், இன்னொரு பாபி சிம்ஹாவாக அட்டாகசப்படுத்தியிருக்கிறார். பிரியானி படத்தில் சந்தானம் பேசும் வசனம் போல, கடையில் சித்தி இத்னானி இவருக்கே என்பதாக கதை முடிவது, அட்டகாசம்!
ப்ளாக் ஹோல் லேப் குரைசி, கூமாப்பட்டி மாதவனுடன் வரும் சசி செல்வராஜ் என்று நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் கச்சிதமாக தங்களது நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
அதுவரை ஆறாயிரம் ஆண்டுகளாக, காதலிப்பதாக வாக்கு கொடுத்து பொம்மைகளாக ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆண்கள் உயிர்ப்பெற்று சாப விமோசனம் அடையும் காட்சியும் நல்ல கற்பனை, அருமையாக உழைத்திருக்கிறார்கள்.
ஒரு காம்பேக்ட் சினிமாவுக்கான அட்டகாசமான ஒளிப்பதிவில் ஜெயந்த் சேதுமாதவனும், சிறப்பான இசையில் ஹரியும் அட்டகாசமாக உழைத்திருக்கிறார்கள்.
ராகவ் மிர்தத், டிரோன்ஸை சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
என்னதான், குழந்தை நட்சத்திரமாக ரித்விக் நடித்திருந்தாலும் ஜெயிலர் 2 குழந்தைகளுக்கான படம் அல்ல, இதில் குழந்தைகளே நடித்திருக்காவிட்டாலும் குழந்தைகளுடன் சென்று பார்த்து ரசிக்கத்தக்க படமாக டிரோன்ஸ்!