a K Vijay Anandh review
ரோஜா கூட்டம் 2002 வெளிவந்த ஒரு காதல் படம். அதில் நடித்த நாயகன் ஶ்ரீகாந்தே நினைத்தாலும் 24 வருடங்களுக்கு பிறகு, அதாவது இன்று அப்படி ஒரு காதல் படத்தில் நடிக்க முடியாது. ஆனால், அந்தப்படத்தை எழுதிய இயக்கிய சசி, அதை விட அதிகமான காதல், கொஞ்சம் ரொமான்ஸ் உடன் நூறு கோடி வானவில் படத்தை இயக்கியிருக்கிறார்.
தக்காளி, படைப்பாளிகளுக்கு , படைப்பாளிகளின் சிந்தனைகளுக்கு என்றுமே வயசு ஆகாதுடா என்று அடித்து இல்ல இல்ல… இயக்கி சொல்லியிருக்கிறார்.
படத்தில் யார் அந்த நூறு கோடி வானவில்..? அட சித்தி இதனானி தான், இன்னும் சொல்லப்போனால் நூறு கோடி கொடுத்தாலும் கிடைக்காத வானவில் அவர் என்று சொன்னாலும் மிகையாகாது. ஒரு சில நாட்களுக்கு முன் டிரோனில் பறந்து வந்து தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தவர், இதில் கோவா ஸ்கூட்டர் கேர்ள் ஆக, ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
மைனே பியார் கியா, கோயமட் சே கோயமட் டாக் போன்ற சல்மான் கான் மற்றும் அமீர்கான் படங்கள் காதல் படங்களுக்கு பிரசித்தி பெற்றவை, பொதுவாகவே காதல் படங்களை பாலிவுட் இயக்குநர்கள் அனுபவித்து எடுப்பார்கள். நடிகர்களின் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நீளமான காட்சிகளில் கொஞ்சம் டயலாக் அதிக முகபாவனைகள் என்கிற பார்முலாவில் அவர்களை நடிக்க வைத்து, அற்புதமாக காட்சிப்படுத்தி ரசிகர்களை கட்டிப்படுவார்கள்.
அதற்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லாத வகையில், சசி இதில் காதல் சடுகுடு ஆடியிருக்கிறார்.
ஒரு பக்கம் சித்தி இதனானி என்றால், இன்னொரு பக்கம் துறுதுறு இளைஞனாக ஹரிஷ் , இங்கே குறிப்பிட்ட இரண்டு காதல் படங்களின் நாயகர்களுக்கும் iree ஒரு வித்தியாசம் தான், அவர்களுக்கு மீசையோ தாடியோ இல்லாத மழு மழு என்கிற முகம், இவரோ அடர்த்தியான மீசை நீளமான தாடி என்று ஒரு மீடியா ஞானி போல அட்டகாசபடுத்தியிருக்கிறார். பல கோணங்களில் அவர் ஒரு ஹாலிவுட் நாயகனை போன்றே வலம் வருவது கூடுதல் சிறப்பு.
ஆம், மும்பையின் ஒரு பெரிய சேனல் ஒன்றில் வெற்றிகரமான ஷோ டைரக்டராக வலம் வரும் ஹரிஷ், வித்தியாசமான ஒரு ஷோ பண்ணுவதற்காக கோவாவுக்கு அனுப்பப்பட, அங்கே சித்தி இதனானியை பார்த்தவுடன் பற்றிக்கொள்கிறது காதல்..
ஏஏற்கனவே இன்னொருவரின் காதலியாக இருக்கும் சித்தி, ஹரிஷுக்கு சிக்குகிறாரா இல்லையா என்பதே அடுத்த பாதி..
இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.
VJ பார்வதி ஒரு பக்கம் காமெடியில் கலக்க, நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்ட்ரும்மா என்கிற ரீதியில் கோவை சரளா ஒருபக்கம் தூக்கி சாப்பிட, அறிமுக காட்சியிலேயே தம்பி ராமையா காமெடி செய்ய அந்தப்பக்கமும் நிறைவாக பேலன்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.
ஹரிஷின் தாய்மாமனாக வரும் சின்னி ஜெயந்த் உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டே அந்தக்காலத்தில் கார்த்திக் முரளி போன்றோருக்கு என்ன செய்தாரோ அதை ஹரிஷூக்கு செய்கிறார்.
குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் அளவிற்கு , அதுவும் இந்த வானவில்லை பார்ப்பதற்கு வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம், வீட்டிற்குள்ளேயே அமர்ந்து பார்க்கும் வண்ணம், Z5 இல் வெளியாகியிருக்கிறது.
வீட்டிற்குள்ளேயே வந்திருக்கும் இந்த நூறு கோடி வானவில்லை பார்த்து மகிழுங்கள்!