a K Vijay Anandh review
என்னடா நம்ம ஊர்ல கலாச்சார சிறுவர்கள் ஆரம்பித்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, திருமண வாழ்க்கை எப்படி குடும்பங்களை புரட்டிப் போடுகிறது, பெண்களை எப்படி தனிமரம் ஆக்குகிறது , கணவன் இல்லாத நிலையில் தனியாக தன் மகளை ஆளாக்க ஒவ்வொரு தாய்மார்களும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்| , தன் தாயின் கஷ்டத்தை பார்த்து திருமண வாழ்க்கையின் மீது நம்பிக்கையே போய்விடும் அளவிற்கு இன்றைய தலைமுறை பெண்கள் பொதுவெளியில் சாதனையாளர்களாக திகழ்ந்தாலும், வீட்டிற்குள் எவ்வளவு மன அழுத்தத்துடன் வளர்கிறார்கள், அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு காரணம் இந்த சமுதாயம் தான், என்பதை மறைமுகமாக உணர்த்தி இறுதியில் கலாச்சாரத்திற்கு, சிறு களங்கம் கூட ஏற்படாத வகையில் படத்தை முடித்த விதம் அருமை.
ஒரு இடைவெளிக்குப் பிறகு நாசர் மற்றும் அனுஷ்கா கூட்டணியை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
ஐரோப்பாவில் புகழ்பெற்ற மாஸ்டர் செஃபாக இருக்கும் அனுஷ்கா திருமணம் செய்யாமலே தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று முடிவு எடுத்து, அதற்கு தகுதியான ஒரு விந்து கொடையாளரை தேடி அலையும் காட்சிகள் சுவாரசியம்.
அடிப்படையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்தாலும் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக வர வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் நவின் பொலி ஷெட்டியை சந்தித்து இவர் தான் நமக்கு சரியான ஆள் என்று முடிவெடுக்கும் அனுஷ்கா, கடைசியில் அது ஒரு காதல் அல்ல ஒரு விந்து கொடைக்காக தான் என்று அறியும் பொழுது நாயகன் மனம் உடைகிறது.
அதையும் மீறி அனுஷ்காவின் மனதை புரிந்து கொண்டு அவர் தனது உயிர் அணுக்களை தானமாக வழங்கினாரா? அனுஷ்காவிற்கு குழந்தை பிறந்ததா ? இறுதியில் அனுஷ்கா நவீனின் காதலை ஏற்றுக் கொண்டாரா ? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும் ரதனின் இசையும் படத்திற்கு மிக பெரிய பலம் சேர்த்திருக்கின்றன.
ஒரு சர்வதேச தரத்திலான பட ஆக்கம் மற்றும் கதை கரு – திரைக்கதை ஆகியவற்றுடன் நமது நாட்டின் கலாச்சாரத்தையும் மற்றவர்கள்ஒரு துளி கூட குறைத்து மதிப்பிட்டு விடாதபடி மிகவும் நேர்மையான படமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார் மகேஷ் பாபு.
mysixer rating 5/5