ஜவான்

27

a K.Vijay Anandh review

பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்,  சாதாரணமாக ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும் பின்னும் ஒரு பெண் இருக்கிறார் என்று சொல்வார்கள் ஆனால் ஜவான் மற்றும் ஜப்பான் விக்ரம் ரதோர் மற்றும்  அவரது மகன் ஜெயிலர் ஆசாத் ஆகியோர் பின் ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள். இந்த கற்பனை மிகவும்  பாராட்டத்தக்கது.

ஒரு கதாநாயகன் சக்தி வாய்ந்த கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் போற்றப்பட வேண்டுமானால் அவன் அவனை விட சக்தி வாய்ந்த ஒரு வில்லனை ஜெயித்திருக்க வேண்டும் படத்தில், அப்படி ஒரு பவர்ஃபுல் வில்லனாக விஜய் சேதுபதி,  உலகின் நான்காவது பெரிய ஆயுத சப்ளையர் இந்திய ராணுவத்தில்  அவர் அனுப்பிய ஆயுத ஒப்பந்தங்களை ரத்து செய்ய காரணமாக இருந்த விக்ரம் ரதோரை கொல்கிறார், அதோடு அவரது மனைவியையும் தூக்கு மேடைக்கு ஏற்றுகிறார்.

சிறையில் பிறந்த கிருஷ்ணர் வளர்ந்து கம்சனை அளித்தது போல சிறையில் பிறக்கும் மகன் ஷாருக்கான் வளர்ந்து வில்லன் விஜய் சேதுபதியை அழிப்பதோடு இன்ன பிற நிர்வாக தவறுகளையும் தட்டி கேட்டு மக்கள் மத்தியில் ஓட்டு போடும் பொழுது யோசித்து ஓட்டு போடுங்கள் என்று அறிவுரை சொல்லி படத்தை முடிக்கிறார்.

இவரது இந்த போராட்டத்தில் எதிர்பாராத விதமாக மிகவும் சர்ப்ரைஸாக இவரது தந்தை ஷாருக்கானும் சேர்ந்து கொள்ள இரண்டாவது பகுதி ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது ஷாருக்கான், கிங்கான் என்பது இவருக்கு சால பொருந்தும்,

குழந்தைகளுடன் நடிக்கும் பொழுது எப்படி நடிக்க வேண்டும் நாயகியுடன் நடிக்கும் பொழுது எப்படி நடிக்கவேண்டும் வில்லன்களுடன் எப்படி மோத வேண்டும் என்று ஒவ்வொரு காட்சிக்கு ஏற்ப அற்புதமான உடல் மொழி காட்டுகிறார் முன்பே சொன்னது போல விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும் பொழுது இந்த அளவிற்கு உச்சம் தருவோம் என்று நினைத்த கூட பார்த்திருக்க மாட்டார் இந்தியாவின் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் ஷாருக்கான் , அதுவும் அப்பா மகன் என்று இரண்டு ஷாருக்கான்களுடன் மோதி பட்டையை கிளப்புகிறார் நயன்தாரா | நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மாசான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு லேடி ஜேம்ஸ் பாண்ட் போல சண்டை காட்சிகளிலும் அற்புதமாக நடித்திருக்கிறார் முதலில் ஷாருக்கான் யார் என்று தெரியாத நிலையில் அவருடன் திருமணத்திற்கு சம்மதிக்கும் இடத்திலாகட்டும் யார் என்று தெரிந்த பிறகு நேர்மையான பாதுகாப்பு துறை ஊழியராக அவருடன் மோத தயாராகும் இடத்திலும் பின்பு அவரது உண்மை நிலைகள் தெரிந்து அவரது அணியில் இருக்கும் பிரியாமணியின் இடத்தை நிரப்புவதில் ஆகட்டும் இப்படி ஒவ்வொரு இடங்களிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஷாருக்கான் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தீபிகா படுகோன். அவர் இல்லாமல் எப்படி இதோ அப்பா ஷாருக்கானின் மனைவியாக சிறையில் தன் மீது தவறாக  ஜோடிக்கப்பட்ட வழக்கினால் மரண தண்டனைக்கு உள்ளாகிறார். தீபிகா படுகோன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்

அவர் பெற்றெடுத்த குழந்தையை சிறைச்சாலைகள் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மகளிர் கைதிகள் வளர்ப்பது ஒரு அழகான அனுபவமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்படி படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் மிகச் சிறப்பாக தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அனிருத், பான்  இந்தியா இசையமைப்பாளர் என்கிற அளவில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் மிகச் சிறப்பான  இசையை கொடுத்திருக்கிறார்.

என்னதான் இது ஒரு தேசிய அளவில் வெளியான ஒரு படமாக இருந்தாலும் இயக்குனர் அட்லீ தமிழகத்தில் இருந்து சென்ற இயக்குனர் என்பதால் இங்கே தமிழகத்தில் நிலவும் இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அவலம் | அதனால் நிர்வாகம் எவ்வளவு சீர் அடைந்து கிடைக்கிறது என்பதை அடிப்படையாக சிந்தித்து அதையே இந்தியா முழுமைக்குமான பிரச்சினையாக கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.

புதுமையாக சிந்தித்து எழுதப்பட்ட கதை என்கிற அளவில் இல்லாமல் இருந்தாலும் இந்த வார வெளியீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் அமர்ந்து பார்த்து ரசிக்கத்தக்க அளவில் ஜவானை இயக்கியிருக்கிறார் அட்லீ.

mysixer rating 3.5/5