a K.Vijay Anandh review
பொதுவாக பிறரால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், பேய்களாக வந்து மற்றவர்களை பழி வாங்குவார்கள்.
இதில் சம்பந்தமே இல்லாமல் தாங்கள் ஆசையாக வாங்கிய வீட்டில் குடும்பமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆவிகள் அந்த வீட்டிற்கு குடி வருபவர்களை காவு வாங்குகின்றன.
அப்படி அந்த பேய்கள் காவு வாங்குவதை நிறுத்துவது தான் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் டீமன் படத்தில் ஒரு புதுமையான விஷயமாக படுகிறது.
நம்ம விக்னேஷ் சிவன் தான் டைரக்டர் ஆச்சே, அதாவது படத்தில் சச்சினின் பெயர் விக்னேஷ் சிவன் அவர் இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். படம் எடுப்பதற்காக போட்ட அலுவலகத்தில் தனது கதையையும் மீறி போனசாக பேய்கள் வந்தால் விடுவாரா, அவற்றையே பிரதான கதாபாத்திரங்களாகி படத்தையும் எடுத்து விடுகிறார். இதுதான் டிமன் படத்திற்குள் இருக்கும் படக்கதை.
கிட்டத்தட்ட சோலோ கேரக்டர் மாதிரி படத்தின் பெரும் பகுதியை சச்சின் ஒருவரே ஆக்கிரமித்து விடுகிறார். அந்த அளவுக்கு ஒரு சவாலான கதாபாத்திரத்தை அற்புதமாக தலையில் சுமந்து இருக்கிறார் சச்சின். வசீகரமும் திறமையும் ஒருங்கே பெற்ற அபர்னதி, அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாமோ என்று தோன்றாமல் இல்லை.
முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டி இருந்தால், விளையாட்டாக நடித்துக் காட்டும் அபர்னதியை இரண்டாம் பாதியில் நாயகனுக்கு இணையாக பயன்படுத்தி இருந்தால் டீமன் ஒரு முழுமையான திகில் பொழுது போக்காக மாறி இருக்கலாம்.
mysixer rating 3/5