ENEMY OF THE SMUGGLER

Rating 3.6/5

10

a K Vijay Anandh review

நித்யானந்த மஹாரஜ் சொல்வாருல்ல, வைச்சான் பாரு ஆப்பு… அப்படினு… அந்த மாதிரி வைச்சான் பாரு டைட்டில்னு சொல்லத்தோனுது.

கடத்தல்காரர்களின் எதிரி, யாரு..? அவரு தான  ஹீரோ€1

2029 க்குள் இந்தியாவில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என்று பாரத உள்துறை அமைச்சர் அமித் ஷா வின் சூழுரைக்கு வலுசேர்க்கும் விதமாக வெளியாகியிருக்கும் படம் ENEMY OF THE SMUGGLER. ஒரு நேர்மையான  கஸ்டம்ஸ் அதிகாரி இருந்தால், நமது இளைஞர்களை போதையின் பிடிக்கு அடிமையாகாமல் காப்பாரிவிடலாம் என்கிற நல்ல எண்ணத்தை இந்தப்படம் மூலம்  விதைத்திருக்கும்  டி சமய முரளிக்கு பாராட்டுகள். அவரே இந்தப்படத்தை தயாரித்து இயக்கி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

எவ்வளவு தான் கண்கொத்தி பாம்பாக நேர்மையான அதிகாரிகள் பணியாற்றினாலும், தாங்கள் செய்வது என்னதென்றே தெரியாமல் சில  கீழ் அதிகாரிகள் செய்யும் தவறுகளால், எவ்வளவு பிரச்சினைகள், போராட்டங்கள் என்று அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் போதை சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கும் லாலும், உள்ளூரில் அவரது ஏஜெண்டாக இருந்து இளைஞர்களை சீரழித்துக்கொண்டிருக்கும் சகரவர்த்தியையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து தீர்த்துக்கட்டுவது அட்டகாசம்.

நடுவில், சரண், சினேகாவின் காதல். ஒரு நடுத்தரவர்க்க இளைஞனாக,  அப்பா கட்டிய வீட்டை அம்மாவிற்கு பெற்றுதர போராடும் இளைஞனாக அவர் வழி தவறுவதும், ஒரு கட்டத்தில் திருந்தி வாழ முயற்சிப்பதும் நல்ல காட்சியமைப்பு. சரண் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சினேகா, பெயரில் சினேகா இருந்தாலும்  ஷ்ரத்தா ஸ்ரீனாத்தும், விந்தியாவும் கலந்து செய்த கலவை மாதிரி இருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார்,  தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார்.

வழக்கம் போல அம்மாவாக ராதிகா சரத்குமார், சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பனாக வரும் பால சரவணன், அட்டகாசம்.

சகரவர்த்தி மற்றும் லால் மிரட்டியிருக்கிறார்கள்.

சமயம் முரளி, ஏற்றுக்கொண்ட தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக பொர்ந்தியிருக்கிறார்.

போதைப்பொருள் கடத்தல், காதல், செண்டிமெண்ட், சேஷிங், ஆக்‌ஷன் என்று ரசிகர்கள் கொண்டாடும் திரைக்கதையாக  இந்தப்படமும் இந்த வாரம் வெளியாகிறது.

சட்டமும் நீதியும் இணைய தொடர், ஜெயிலர், சர்தார் , இந்தியன் போன்ற படங்கள் மாதிரி  ENEMY OF THE SMUGGLER இந்தப்படமும் வெவ்வேறு கடத்தல் பின்னணியில் வெளிவரலாம். ஏனென்றால், இந்தப்படம் ஒரு உண்மைச்சமபவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.