மேக்னா ஏலன், 3 நண்பர்களை ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள முடியாதவாறு காதலிக்கிறார். இந்த கிரைமா தப்பில்ல..?
இந்த 3 காதலுக்கு சிலர் மறைமுகமாக ஆதரவு தருகிறார்கள். இந்த கிரைமா தப்பில்ல?
தவறு செய்து விட்டு நீதி மன்றத்தில் பொய் சாட்சி, பண பலம், அரசியல் பலம் மூலம் தப்பித்தவர்களை தேடி பிடித்து தனது நண்பர்களுடன் இணைந்து தானே தண்டனை தருகிறார் பாண்டி கமல் . இந்த கிரைமா தப்பில்ல?
ஆடுகளம் நரேன் சமூக அவலங்களை தட்டி கேட்க போராடும் அனைவரையும் இணைக்கும் நபராக தலைமை தாங்குகிறார். இந்த கிரைமா தப்பில்ல?
ஜாதி வெறி பிடித்த கும்பல் போடும் கும்மாளம் இன்னொரு புறம். இந்த கிரைமா தப்பில்ல?
ஏன் நாயகி 3 நண்பர்களை காதல் செய்கிறார்? மேலே சொன்ன 4 கதைகளும் ஏன் ஒரு புள்ளியில் ஒன்று சேர்கிறது? எந்த கிரைம் தாம்பா தப்பில்ல?
அனைத்துக்கும் அற்புதமான விடையை கிளைமாக்ஸில் அளித்திருக்கிறார் இயக்குநர் தேவகுமார்.
மேக்னா ஏலன் அழகும் திறமையும் சேர்ந்த நாயகியாக ஜொலிக்கிறார். ஆடுகளம் நரேன், பாண்டி கமல் ஆகியோரின் இயல்பான நடிப்பு படத்திற்கு பக்கபலம்.
இசை பாடல் – பின்னணி அருமை, ஒளிப்பதிவு சிறப்பு, படத்தொகுப்பு படத்திற்கு பலம். கதை, திரைக்கதை வசனம் இயக்கம் அருமை.
இது போன்ற படங்களை ரசிகர்கள் ஆதரிப்பதில் தப்பில்ல
mysixer rating 3/5