a K.Vijay Anandh review
Deadpool Wolverine மட்டும் என்ன நம்புகின்ற மாதிரி கதையா ? உஉலகம் முழுவதும் வெளியாகி 3000 கோடிகளை குவித்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் ஹாரர் படம், பேச்சி ரசிகர்களை கவரப்போவது நிச்சயம்.
மலை ஏறுவதற்கு செல்லும் ஒரு சிலர் செய்யும் தவறுகள் எந்த அளவிற்கு பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு பேச்சி ஒரு சான்று.
அது பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு காடுகளை மாசுபடுத்துவதாக இருக்கலாம், மது பாட்டில்களை உடைத்து வன விலங்குகளுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கலாம் அல்லது இந்த படத்தில் வருவது போல ஆணி அடித்து அடக்கி வைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்ய சக்திகளை தங்களை அறியாமல் வெளியே வர உதவுவதாக இருக்கலாம்.
அப்படி மலை ஏற்றத்திற்கு செல்லும் ஒரு ஜோடி அவர்களை அறியாமல் மரத்தில் ஆணி அடித்து வைக்கப்பட்டிருந்த பேச்சி என்கிற கொடூரமான பேயை விடுவித்து விட அடுத்தடுத்து நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களும் அதற்கான விடைகளுமே விறுவிறுப்பான பேச்சி படத்தின் திரைக்கதை.
காயத்ரி, தேவ், ஜனா, ப்ரீத்தி நெடுமாறன் மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் அந்த காட்டுப் பகுதியில் குடியிருக்கும் பால சரவணன் உதவியுடன் மலையேற்றத்திற்கு செல்ல ஆரம்பிக்கும் அந்த வினாடியில் இருந்து ரசிகர்களுக்கு ஒரு திகிலான அனுபவத்தை கொடுக்கின்றது பேச்சி.
எளிஎளிமையான நடிகர்களை வைத்து மிகவும் எளிமையான கதையையும் வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் காட்சிக்கு காட்சி ரசிகர்களை பயமுறுத்தி இருக்கிறது என்றால் அதற்கு ஒளிப்பதிவு, இசை, கலை மற்றும் எடிட்டிங் ஆகிய நான்கு துறைகளும் மிகச் சிறப்பாக பங்காற்றி இருக்கின்றன என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
ஒளிப்பதிவு செய்து இருக்கும் பார்த்திபன், இசையமைத்திருக்கும், ராஜேஷ் முருகேசன், கலை இயக்குனராக பணியாற்றி இருக்கும் குமார் கங்கப்பன் மற்றும் எடிட்டிங் இல் புகுந்து விளையாடி இருக்கும் இக்னேஷியஸ் அஸ்வின் ஆகியோரின் நேர்த்தியான பங்களிப்பு இயக்குனர் ராமச்சந்திரன் பி க்கு பேச்சி படத்தை மிகச் சிறப்பான படைப்பாக கொடுப்பதற்கு உதவி இருக்கிறது.
என்னடா இது திரும்பத் திரும்ப காயத்ரி, பால சரவணன் மீது அவன் இடைஞ்சலாக இருப்பதாக வெறுப்பை உடைந்து கொண்டே இருக்கிறாரே என்று யோசிக்க தோன்றும், அதற்கான விடையை கிளைமாக்ஸ் இல் நச்சென்று வைத்திருக்கிறார் இயக்குனர்.
மலையேற்றத்திற்கு செல்லும் அந்த ஐந்து பேரில், ஒவ்வொருவரும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள் என்றாலும் ஸ்டில் போட்டோகிராபராக வரும் மகேஸ்வரன் அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறார்.
பேச்சியாக வரும் சீனியம்மாள் பாட்டியின், பயமுறுத்தும் அந்த சிறப்பு ஒப்பனைகளும் அவரது இடத்தில் பயமுறுத்தும் கலை பொருள்களும் கவனிக்க வைக்கின்றன.
இரண்டு மணி நேரத்திற்கு 10 நிமிடங்கள் குறைவாக இருந்தாலும் ஒரு நிறைவான ஹாரர் பட அனுபவத்தை வழங்கி இருக்கிறது பேச்சி.
பேச்சி, ரசிகர்களை பயத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் ஒரு உத்தரவாதமான பொழுதுபோக்கு!