ஆலன்

mysixer rating 3/5

76

a K. Vijay Anandh review

ஒரு காட்சி , நாயகன் டிரவுசர் போட்டுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் தனது மாமா மகளுடன் இராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பொழுது , ஜெர்மன் தம்பதியரை அவர்களது மகளுடன் சந்திக்கிறார். இந்த காட்சியே படத்தின் மையப்புள்ளி எனலாம் . அந்தளவுக்கு ஆழமாக சிந்தித்து அதற்கு முன்னரும் பின்னருமாக உருக்கமான திரைக்கதை அமைத்து ஆலன் படத்தை இயக்கியிருக்கிறார் ஆர் சிவா.

அதன் பிறகு பல ஆண்டு இடைவெளியில் ஜெர்மன் சிறுமி ஜனனியாக வளர்ந்து, இந்தியா வரும்பொழுது மீண்டும் சந்திக்கிறார், அடுத்த சில ஆண்டுகள் கழித்து மாமா மகளையும் சந்திக்கிறார், நாயகன்.

தென்கோடியில் பூம்பாறை கிராமம் வடகோடியில் ரிஷிகேஷ் , காசி என்று ஒரு அழகான பயணமாக ஆலன் விரிகிறது. அதற்குள் நாயகனின் ஒரு 30 வருட வாழ்க்கையும் அடங்கி விடுகிறது.

மனா நிம்மதிக்காக ஆன்மீகத்தை தேடிப்போனாலும் , அயல் நாட்டு ஜனனியும் மாமா மக்கள் தாமரையும் நாயகனுக்காக காத்திருப்பதும் வாழ்க்கையில் ஒரு பாதியாக ஆகிப்போவதும் அழகு. ஆன்மீகத்தேடலில் குருவாக ஹரிஷ் பேரடி சிறப்பாக நடித்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் , விவேக் பிரசன்னா , அருவி மாதவன் உள்ளிட்ட குடும்பம் பூம்பாறையை வீட அழகாக தெரிகிறது.

வெற்றிக்கு எப்படி தொடர்ந்து இப்படி நல்ல கதைக்களங்கள் அமைகின்றன என்பதுச்சிரியமான விஷயம் தான். அவரும் தொடர்ந்து புதிய இயக்குநர்களுக்கு வாய்புகள் வழங்கி வருவதும் பாராட்டத்தக்க ஒன்று. அவரது படங்கள் கதைகளுக்காக மட்டுமல்ல எவருக்காகவும் ஓட வேண்டும் என்கிற வைராக்கியத்தை மனதில் கொண்டு அதற்கேற்ப இன்னும் தயார்ப்படுத்தி கொள்ளவேண்டும், வெற்றி.

ஜனனி தாமஸ் ஆக வரும் மதுரா , தாமரையாக வரும்னு சித்தாரா ஆகியோர் நிறைவாக நடித்து மனதில் இடம்பிடித்து விடுகிறார்கள். மேன்ஷன் கல்லாவில் உட்கார்ந்து கொண்டே கலக்கியிருக்கிறார் கருணாகரன்.

கேபிள் சங்கர் உள்ளிடட எழுத்தாளர்கள் அமர்வுடன் கூடிய வாசகர் வட்ட சந்திப்பு படத்தின் கிளைமாக்ஸுக்கு அற்புதமாக பொருந்தி போயிருக்கிறது .

விந்தன் ஸ்டாலினின் ஒளிப்பதிவு , மனோஜ் கிரஹனா வின் இசை அனைத்தும் படத்திற்கு பக்க பலம்.