ஆர்யமாலா

mysixer rating 3.5/5

83

a K. Vijay Anandh review

ஒரு பெண்ணாக வாழ்ந்து பார்த்தால் தான் அவர்களுது அருமையும் , அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் ஆகியவை புரியும்.

மலராக வரும் மனிஷா ஜித் , அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவர் , தனது தங்கை மீது வைத்திருக்கும் பாசம் , அம்மா மீது வைத்திருக்கும் பாசம் , கனவில் வந்த காத்தவராயன் மீது கொள்ளும் காதல் , ஊரை காத்து நிற்கும் அய்யனாருடனான அவரது உரையாடல்கள் என்று அனைத்தும் அருமை.

தன வயிற்றில் பெற்றிருக்கவில்லையென்றாலும் மனிஷா ஜித்தை விட்டுக்கொடுக்காமல் நிற்கும் இடங்களில் அம்மாவாக நடித்திருக்கும் எலிசபெத் சுராஜ் கவனிக்க வைக்கிறார். அப்பத்தா , அம்மா , சகோதரிகள் , உறவுக்கார பெண்கள் என்று அனைத்து பெண்களும் ஒருவர் மீது ஒருவர் காட்டிக்கொள்ளும் அன்பில் சங்கின் வெண்மை தோற்றுப்போய்விடுகிறது.

ஆர் எஸ் கார்த்திக்குக்கு இந்தப்படத்தில் சவாலான கூத்து கலைஞர் வேடம் , சிறப்பான உடல்மொழிகளுடன் மேடையிலும் , அழுத்தமான காதலுடன் மனிஷா ஜித்துடனும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். சிவசங்கர் மாஸ்டர் தலைமையிலான கூத்து கலைஞர்கள் , அவர்களுக்கு கிராமத்தினர் உபசரிக்கும் காட்சிகள் என்று அனைத்தும் அருமையாக கையாளப்பட்டிருக்கின்றன.

பாடல்களும் செல்வம்பியின் இசையும் அருமை. குறிப்பாக நய்யாண்டியும் நிலப்பெருமையும் கலந்து ஒலிக்கும் திருவிழா பாடல் அருமை. எழுதியவருக்கு பாராட்டுக்கள் .

எவ்வளவு அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் , மானுட வாழ்க்கை கிராமங்களில் தான் வேரூன்றி நிற்கிறது , ஆலமரமாய். அதனடியில் அமர்ந்து ஆர்யமாலாகாத்தவராயன் காதலை பார்த்து ரசிப்பது சுகமான அனுபவமே !