The Door

mysixer rating 4/5

146

a K Vijay Anandh review

மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து வேலை பார்க்கும் ஒரு கட்டிட கலைஞர் ஆன பாவனாவிற்கு ஏற்படும் அமானுஷ்ய அனுபவங்களும்,   அவை ஏன் எதற்காக ஏற்படுகின்றன,  அதனால் இறுதியில் என்ன நடக்கிறது  ? என்பதை மிகவும் விறுவிறுப்பாகவும் போர் அடிக்காமலும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெய் தேவ்.

நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கும் நகர பகுதிகளில் இடம் வைத்திருப்பது அதுவும் அதை பாதுகாக்க சரியான நபர்கள் குடும்பத்தினர் இல்லாதது எப்படி ஒரு குடும்பத்தை சின்னாபின்னமாக்கிறது அதே நேரம் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதற்கு இணங்க அவர்களது இடத்தில் இருக்கும் அவர்கள் வழிபடும் குலதெய்வம் அவர்களை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதாக அமைக்கப்பட்ட இந்த திரைக்கதையின் மூலம், அளவிற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்போர் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்கிற ஒரு செய்தியையும் இந்த படம் சொல்லி இருக்கிறது.

மித்ராவாக வரும் பாவனா, இவரை தமிழ் சினிமாவில் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. என்ன ஒரு அழகும் திறமையும் வாய்ந்த அற்புதமான நடிகை. இவருக்கென்று இந்த படத்தில் ஜோடி எதுவும் இல்லை காதல் டூயட்டுகள் எதுவும் இல்லை, குடும்பத்தில் மூத்த  பெண்ணாக, தான் பணியாற்றும் அலுவலகத்தில் திறமையான ஆர்க்கிடெக்ட் ஆக, பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் கதவாக இருந்து எப்படி வில்லன்களை பழிவாங்க, காரணமாக இருக்கிறார் என்பது போன்ற காட்சிகள் மிகவும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.

பாவனாவின் தோழியாகவும் ஊடக வேளாளராகவும் வரும் பிரியா வெங்கட் மற்றும் அவரது நண்பர் ஆவிகளுடன் பேசும் ரமேஷ் ஆறுமுகம் ஆகியோர் பாவனாவின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவருக்கு உதவ முன்வரும்பொழுது,  அவர்களுடன் பாவனா பணியாற்றம் அடுக்ககத்தில் ஏற்படும் அமானுஷ்ய கொலைகளை துப்பு துலக்கும் காவல்துறை அதிகாரி கணேஷ் வெங்கட்ராமன் உம் சேர்ந்து கொள்கிறார். இந்த மூவரும் இந்த டோர் திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு உதவி இருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் கபில் வேலவனை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும், இளவயது தோற்றம் மற்றும் முதிர்ச்சியான தோற்றம் ஆகியவற்றில் மெனக்கெட்டு ஒப்பனைகள் செய்து அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார்.

ஸ்ரீரஞ்சனி,  ஜெயபிரகாஷ், நந்தகுமார் மற்றும் பாண்டிய ரவி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மிகவும் தெளிவான திரைக்கதை கௌதம் ஜி யின் அருமையான ஒளிப்பதிவு என்று,  த  டோர் இந்த வார வெளியீட்டில் சிறந்த பொழுதுபோக்காக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.