சிங்கம் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

144

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் உயிரினங்களை நீண்ட காலத்துக்கோ  குறிப்பிட்ட காலத்துக்கோ தத்தெடுத்து அந்த காலகட்டத்திற்குள் அவற்றை பராமரிக்க ஆகும் செலவினை வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்திற்கு கொடுக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.

பறவை மற்றும் விலங்கின ஆர்வலர்களுக்கு இந்த வசதி ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல.

அந்த திட்டத்தின் கீழ் சிவகார்த்திகேயன் ஸ்ரேயார் என்கிற சிங்கத்தையும் யுகா என்கிற புலியையும் மூன்று மாதங்களுக்கு தத்தெடுத்து இருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவற்றை பராமரிக்க தேவையான நிதியை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அவர் வழங்குவார்.