a K. Vijay Anandh review
மனிதர்களை கடத்தி அவர்களை சகமனிதர்களை வைத்தே கொடூரமாக கொன்று, அவர்கள் அதீத பயத்தில் சாகும் போது அவர்களது உடம்பில் ஏற்படும் இரசாயண மாற்றித்தில் உருவாகும் ஒரு திரவத்தை சர்வதேச சந்தைக்கு கடத்தும் மாஃபியாக்கள். அவர்களை அழித்து ஒழிக்க தனி ஆளாய் திட்டமிடும் ஏசிபி அர்ஜுன் சர்க்காராக நானி.
அந்த கும்பலுக்குள் ஊடுருவது முதல் தனியாளாக ஒட்டுமொத்த கும்பலையும் வேட்டையாடும் விறுவிறுப்பான திரைக்கதை. முதலில் அவர் மீது சந்தேகம் கொண்டு பின்பு அவரது ஆபத்தான வேட்டையில் இணைந்துகொள்ளும் சக காவல்துறை அதிகாரிகள், நானியின் வருங்கால மனைவியாக வரும் ஸ்ரீநிதிஷெட்டி உட்பட, 2 மணி நேர 37 நிமிட திரைக்கதை பிரம்மோஸ் வேகத்தில் பயணிக்கிறது.
இடைவேளை முடிந்த நிலையில், இரண்டாம் பாதி ஆரம்பிக்கும் முதல் காட்சி முதல் இறுதிக்காட்சிவரை 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆக்ஷன் அதிரடி தான், மிருக வேட்டை தான். மயிர்க்கூச்செரிய செய்திருக்கிறார்கள் இயக்குநர் உள்ளிட்ட ஒவ்வொருவரும்.
நானி, You will not survive என்று அவரை கொல்ல முயற்சிக்கும் ஒரு பெண் சொல்ல, இப்படித்தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று அவரை கொன்று ஜெயித்து எழும் இடம் அழகோ அழகு, செம்ம மாஸான காட்சியமைப்பு.
குழந்தையை காப்பாற்றுவது செண்டிமெண்ட்டின் உச்சம் என்றால், தான் பெற்ற முழு வெற்றியையும் சக பெண்காவல்துறை அதிகாரிக்கு சமர்ப்பிப்பது என்பது தியாகத்தின் உச்சம்.
என்னதான் ஜாம்பவான்கள் நம் ஊரில் இருந்தாலும் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகம் நம்மை விட ஒரு படி மேலே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஆகச்சிறந்த சமீபத்திய உதாரணம் இந்தப்படம்.
சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் திரைப்பட்த்துறையில் சாதிக்கத்துடிக்கும் ஒவ்வொருவரும் பார்த்து மகிழவேண்டிய திரைப்படம் HIT The third case.
Hatsoff to director Sailesh Kolanu