a K Vijay Anandh review
யோகிபாபு, ஒரு இயக்குநர் நடிகர் தான். அவரை வைத்து நகைச்சுவை படமும் எடுக்கலாம், விருதுகளை வெல்லும் படமும் எடுக்கலாம். ஜோரா கைய தட்டுங்க, இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு உணர்வு. இயக்குநர் வினீஷ் மில்லினியம், இன்னும் கொஞம் மெனக்கெட்டிருந்தால், ரசிகர்கள் எழுந்து நின்று ஜோராவே கையைத்தட்டியிருப்பார்கள். நல்ல கதைக்களம், நல்ல லொகேஷன்ஸ், அளவான அதே நேரம் நல்ல திறமையான நடிகர்கள் ஹரிஷ் பேரடி, மணிமாறன், கல்கி மற்றும் அருவி பாலா, இவர்களுடன் கதாநாயகியாக சாந்தி ராவ் என்று நல்ல நடிகர்கள்
யோகிபாபு இதுவரை ஏற்றிராத மேஜிசியன் கதாபாத்திரம், மக்கள் மன்றத்தில் தோற்றுப்போகும் யோகிபாபு, ஒரு சிறுமிக்காக வில்லன்களை பழிவாங்கும் போது தனது மேஜிக் திறமையால் ஜெயிக்கிறார்.
கத்தியின்றி, இரத்தமின்றி ஏன் , கை உட்பட எந்த ஆயுதங்களுமின்றி தான் வில்லன்களை கொல்கிறார். ஆகவே, அவர் அரெஸ்ட் செய்யப்பட்டு நீதிமன்றத்தால், சாட்சியங்களின்றி குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுவது போல காட்சி அமைத்திருக்கலாம்.
ஒரு மேஜிக் நிகழ்ச்சியில் தீயில் தனது தந்தையை பறிகொடுத்துவிட்டு ஆதரவில்லாமல் வளரும், யோகிபாபுவின் கண்களில் அந்த தனிமையின் சோகம் பளிச்சிட்டுக்கொண்டே இருக்கிறது. தந்தையை கொன்ற அதே தீயை ஜெயித்து இன்னொரு இடம் சென்று விடுகிறார் கிளைமாக்ஸில்.
ஜோரா எடுத்திருக்கலாம் !