GUTS

mysixer rating 2.5

122

a K.Vijay Anandh review

அறிமுக படத்திலேயே போராளித்தனமான விவசாயி , துடிப்பான காவல்துறை அதிகாரி , அதற்கு முன் காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞன் , மனைவியை பறிகொடுத்த நிலையில் குடியும் சோகமும் சூழ்ந்த ஒரு கேட் அப் என நான்கு வித்தியாசமான தோற்றங்களில் வருகிறார் ரங்கராஜ்.

ஒரு நடிகராக இப்படி ஆச்சிரியப்பட வைத்திருக்கிறார் என்றால், இயக்குநராக , ஆதரவற்ற இல்லத்தில் இருந்து முதலில் ஒரு பெண் குழந்தையையும் அதனை வளர்க்க ஒரு மனைவியுமாக ஒரே நேரத்தில் இரண்டு ஆதரவற்ற பெண்களை அரவணைக்கிறார் , தந்தையாகவும் கணவனாகவும்.

சிங்கிள் சைல்டு கலாச்சாரம் பெருகிவிடட இன்றைய சூழ்நிலையில் , இந்த காட்சியமைப்பு மிகப்பெரிய முன்னுதாரணம். மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.

ஸ்ருதி நாராயணன் மற்றும் நான்சி இருவேறு காலகட்ட்ங்களில் நாயகனுக்கு ஜோடியாக வருகிறார்கள். ஸ்ருதி நாராயணன் , கிராமத்து பிள்ளைத் தாச்சி பெண்ணாக கண்கலங்க வைத்து விடுகிறார்.  சாய் தீனா, டெல்லி கணேஷ் மற்றும் பிர்லா போஸ் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ரசாயன உரங்களை தடை செய்யும் கிராமம் , குறுக்கே நிற்பவர்களை கொல்லும் வில்லன், அவனை பழிவாங்கும் நாயகன் என்று 8-90 காலகட்டங்களில் வெளியாகும் வணிக மசாலா படங்களின் அதே வெற்றி பார்முலா தான்.

இன்றை போட்டிகள் நிறைந்த சூழலில் பட ஆக்கத்தில் குறைந்தபட்ச நேர்த்தி மிகவும் அவசியம், அது இருந்திருந்தால் கட்ஸ் , நிஜமாகவே கட்ஸ் காட்டும் படமாக அமைந்திருக்கும்.