படை தலைவன்

mysixer rating 3.5/5

113

a K Vijay Anandh review

 

25 வருடங்களாக தனது சகோதரனைப்போல தன்னுடைய வீட்டில் தன்னுடனே வளர்ந்த யானை, சதிகளுக்கு துணைபோகும் அதிகாரவர்க்கத்தால் காணாமல் போகிறது.

சண்முக பாண்டியனும் அவரது நண்பர்களும் , பேராசிரியர் ரமணாவின் வழிகாட்டுதல் படி அந்த யானையைத் தேடி ஒடிசாவுக்கு பயணமாகிறார்கள். அங்கே பழங்குடிகளை பயமுறுத்தி காட்டை அபகரிக்கும் கும்பல், தங்களது எஜமானர்களுக்காக காட்டுவிலங்குகளை பலிகொடுக்கிறது, அடுத்த முழு நிலவு நாளில் சண்முகபாண்டியன் வீட்டில் வளர்த்த யானை பலி கொடுக்கப்பட காத்திருக்கும் வேளையில், சண்முக பாண்டியன், அங்கே வசிக்கும் பழங்குடி மக்களின் துணையுடன் எப்படி தனது யானையை மீட்டு வருகிறார் என்பதே படை தலைவனின் விறுவிறுப்பான திரைக்கதை.

சண்முக பாண்டியன், இன்னொரு யானை போல கம்பீரமாக நிற்கிறார், எப்படி அவ்வளவு பெரிய யானை சாந்தமாக நிற்கிறதோ அதைப்போல. மதம் பிடித்தால்  எப்படி துவம்சம் செய்யுமோ அதைப்போல, மதம்பிடித்த யானையாக வில்லன்களை துவம்சம் செய்கிறார். படம் முழுவதும், அவருக்கு இறுக்கமான முகபாவனைகள் தான். காதலிக்க ஜோடி கூட இல்லாதது வருத்தமே ரசிகர்களுக்கு!

கே ஜி எஃப் வில்லன் ராமுடன் சேர்ந்து நம்மூர் வில்லன் ரிஷி ரித்விக்கும் மிரட்டியிருக்கிறார்.

பழங்குடி மக்களின் பூசாரியாக முனிஷ்காந்த் அவரது மகளாக யாமினி சந்தர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ரமணா கதாபாத்திரத்தில் கேப்டன் தரிசனம் கொடுப்பது, நிஜமாகவே நெகிழ்ச்சியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏ வெங்கடேஷ், யூகிசேது, ஸ்ரீஜித்ரவி, அருள்தாஸ் ஆகியோருடன் கஸ்தூரி ராஜாவும் நடித்திருக்கிறார், அனைவருமே அனுபவ  நடிகர்கள், சிறப்பாக  நடித்திருக்கிறார்கள்.

பலிகொடுக்கப்பட இருக்கும் நிறைமாத கர்ப்பிணி யானையின் பிளிற்லைக்கேட்டு காட்டு யானைகள் படையெடுக்கும் காட்சிகளை கிராபிக்ஸில் தான் என்றாலும் மிகவும் தத்ரூபமாக காட்டி அசத்தியிருக்கிறார்கள்.

யு அன்பு, படை தலைவனை சிறப்பாக இயக்கியிருக்கிறார்!