Phoenix – வீழான்

mysixer rating 4/5

242

a K. Vijay Anandh review

2010 ல் தந்தை விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க ஆரம்பிக்க, 2025 ல் அவரது மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகிறார். உல சினிமா வரலாற்றிலேயே, இவ்வளவு குறுகிய ஆண்டு இடைவெளியில் தந்தைமகன் ஹீரோவாக சினிமாவில் சாதிப்பது என்பது இதுவே முதலாகா இருக்கும், அதற்கு இருவருக்கும் பாராட்டுக்கள் .

சூர்யா சேதுபதி, சாக்குத்துணி கட்டிய முகத்துடனே காவல்துறையால் அழைத்துச்செல்லப்பட்டு , நீதிபதி கஜராஜ் முன் ஆஜர் படுத்தப்பட்டு , சிறார் ஜெயிலுக்கும் அழைத்து வரப்படுகிறார். அங்கே, அந்த சாக்குத்துணியை பிரித்து அவரது முகத்தை முதலில் பார்ப்பது , ஜெயிலராக நடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அதன்பிறகே , படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அவரது முகம் காட்டப்படுகிறது. இது எதேச்சையாக அமைந்ததா அல்லது எடிட்டர் பிரவீன் கே எல், சூர்யா சேதுபதி இப்படி அறிமுகமாகட்டுமே என்று வைத்தாரா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அந்த விஷயத்திற்கு இயக்குநர் அனல் அரசு உள்ளிடட குழுவினருக்கு முதலில் பாராட்டுக்கள்.

படத்தின் முதல் பாதியில் சூர்யா பேசும் வசனம் , ” அம்மாவை பார்த்துக்கோ ..” அவ்வளவு தான் , ஒரு வரி கூட இல்லைஇரண்டே வார்த்தைகள் தான். குடியிருந்த கோயில் எம் ஜி ஆர் முதல் மன்னன் ரஜினிகாந்த் வரை அம்மாவை பார்த்துக்கொண்டவர்கள் உச்சத்திற்கு சென்றது தவிர்க்கமுடியாதது. காட்சிகள் படி , முதல் பாதி சூர்யா சேதுபதியின் தக் லைஃப் , மூன்று முறை அவரை கொள்ள முயற்சிக்கும் எதிரிகளை துவம்சம் செய்துவிட்டு தப்பிக்கிறார் .அவரை ஏன் கொள்ள முயற்சிக்கிறார்கள் ? அவர் எதற்காக எம் எல் வைக்கொன்றார் என்பது தான் அண்ணன்தம்பி பாசம் சொல்லும் உணர்ச்சிகரமான விறுவிறுப்பான இரண்டாம் பாதி.

தேவதர்ஷினி , வரலட்சுமி , சம்பத் ராஜ், திலீபன் ,முத்துக்குமார் , அஜய் கோஷ் , ஹரிஷ் உத்தமன் , ஆடுகளம் நரேன் , முருக தாஸ் , ரிஷி ரித்விக் , வேல்ராஜ் , கஜராஜ், மூணாறு ரவி , ஸ்ரீஜித் ரவி, அபி நட்சத்திரா , நந்தா சரவணன், ஜெ விக்னேஷ் மற்றும் போட்டோவில் தந்தையாக முரளி என்று மிகப்பெரிய யானைக்கூட்டத்தையொத்த நட்சத்திர பட்டாளத்தின் நடுவே மதம் கொண்ட இளம் யானையாகட்டகாசப்படுத்தியிருக்கிறார் . நடிகர்கள் மட்டுமா ? ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் கே எல் பிரவீன் மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் என்று தொழில் நுட்ப யானைக்கூட்டமும் , புதிய வரவிற்காக தீயாய் வேலை செய்திருக்கிறார்கள் .

இப்படி ஒரு பிரமாண்ட அறிமுகம் கிடைத்த சூர்யா சேதுபதி , அதிர்ஷ்டசாலி தான் .

ற்ற நடிகர்களை பற்றி தனியே சொல்லவேண்டியதில்லை , அனைவரும் சிறப்பாக தங்களது கதாபாத்திரங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அனல் அரசு அடிப்படையில் ஒரு சண்டை பயிற்சி இயக்குனர் என்பதால் , அவருக்கு எது நன்றாக வருமோ அதில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் போல, படத்தின் பெரும் பங்கை சண்டைக்காட்சிகளே ஆக்ரமித்திருக்கின்றன.

மிக்ஸடு மார்ஷியல் ஆர்ட்ஸ் என்கிற ஒரு அற்புதமான தற்காப்பு மற்றும் சண்டை கலையை, இன்னும் அதிகமாக இளைஞர்கள் மத்தியில் இப்படம் மூலம் கொண்டு சேர்த்ததற்கு அவருக்கு பாராட்டுக்கள்.

அப்பொழுதே முழுத்திறமையுடன் இருக்கும் சூர்யா சேதுபதி செமி பைனலில் மோதாமல் விடுவதெல்லாம் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. முடிந்தளவு ஃப் கொடுத்து , ஜெகனை முடிந்தளவு பலவீனப்படுத்தி அண்ணனுடன் பைனலில் மோத அனுப்பியிருக்கலாம். அல்லது , சூர்யா சேதுபதி , 120 கிலோவில் இருந்து இப்படி சிக்கென மாறிய விடியோக்களை சமூகவலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. படத்தில் அதே 120 கிலோவில் இருக்கும் சூர்யா சேதுபதி , அண்ணன் ஜெ விக்னேஷ் வில்லன்களால் கொல்லப்பட்ட பிறகு அண்ணனின் கோச் திலீபனிடம் சேர்ந்து தீவிர பயிற்சி எடுத்து, இப்படி ஒரு பிட்னஸ் கொண்டு வந்து அதன்பிறகு எம் எல் வைகே கொல்வதில் இருந்து என்று படம் இருந்திருந்தால் இன்னும் பெரிய உந்துதலாக இருந்திருக்கலாம். அண்ணன் இன்னும் கொஞ்சம் எளிதாக ஜெயிக்க உதவியிருக்கலாம், பைனலில் ஜெயித்தால் தான் அண்ணனுக்கு வேலையும் காதலும் கைகூடும் என்கிற  நிலையில் !

அண்ணன் கொலைசெய்யப்பட்டதே பழிவாங்க போதுமான காரணமாக இருக்கும் நிலையில் அநியாயமாக அபி நட்சத்திரவை மானபங்கப்படுத்தும் காட்சி அவசியமா ?

120 கிலோவில் இருந்துதீவிர பயிற்சி எடுத்து, இப்படி ஒரு பிட்னஸ் கொண்டு வந்து நடிகனாக மெனக்கெட்டிருக்கும் சூர்யா சேதுபதி , எப்போதும் வீழான் !