பறந்து போ

mysixer rating 4.5/5

328

a K Vijay Anandh review

கோபித்துக்கொண்டு மலையேறி மகன் முருகனை கிழே இறங்க வைக்க, அகிலத்தையே காத்து ரட்சிக்கும் ஷிவ பெருமானாலேயே முடியவில்லை, ஆனால் , அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் ஷிவா செய்து முடிக்கிறார்.

நகர்ப்புற அதுவும் அபார்ட்மெண்ட் குந்தைகளின் வானத்தின் மொத்த பரப்பளவே 10 க்கு 10 அல்லது அதிகப்பட்சம் 1000 சதுர அடிகள் தாம். ஆனால் சிறகை விரித்து பறக்கும் சிட்டுக்குருவிக்கு, வானம் அது பறக்கும் தூரம், பார்க்கும் தூரம் அல்லது அதற்கு மேலும்.

அப்பாவும் அம்மாவும் வேலைக்கு சென்று விட வீட்டுச் சிறையில் அகப்பட்டுக் கிடக்கும் அன்பு அவன் சிறகை விரிக்க ஆசைப்பட , அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே பறந்து போ படத்தின்ழகான திரைக்கதை.

ராம் மாதிரியான ஒரு இயக்குனர் ஷிவா மாதிரியான ஒரு ஹீரோவை நடிக்க வைக்க முடிவு செய்த போதே இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறி விட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. அப்படி ஒரு திரைக்கதை , அதற்கு அப்படி ஒரு பொருத்தமான நாயகனாக ஷிவா . அன்புவாக வரும் மிதுன் ரியான் குழந்தை நட்சத்திரமா அல்லது ஷிவாவா என்று சந்தேகம் வரும் அளவிற்கு இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். தான் கால்பந்து விளையாட வாங்கிய டி ஷர்ட்டை போட்டுக்கொண்டு மகன் கோல் போடும் காட்சியை ரசிக்கும் ஷிவா , பேக்கை திறந்தால் தாகம் தீரும் என்பது கூட தெரியாமல் , தாகத்தையும் தண்ணீரையும் ஒருங்கே சுமந்து கொண்டு ஓடும் காட்சிகள் வெடிச்சிரிப்பு ரகம். கோமாளி அப்பாவை அல்ல, மகன் எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் பொறுத்துக் கொள்கிற இந்த கோகுல் அப்பாவை தமிழர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.

மிதுன் ரியான் என்னவோ அந்த ரோட் டிரிப்பை அவருக்காக பிளான் பண்ணினாலும் அவரை விட அதிகமாக அனுபவிப்பது ஷிவா தான்.

அன்புவாக வரும் மிதுன் ரியான் , ஸ்கேட்டிங் அல்லது ரன்னிங் அல்லது டிரெக்கிங் என்று துறுதுறுப்பாக மனதை கொள்ளை கொள்கிறார். அப்பா மீது கோபித்து கொள்வதும் , அப்பாவின் கஷ்டத்தை பார்த்து சாரி கேட்பதுமாக , அள்ளி அணைக்கத் தோன்றும் நடிப்பு .

வழக்கமான சினிமா பார்முலாவை பின்பற்றி ஷிவா விற்கு ஒரு ஜோடியை தேர்ந்தெடுத்தால் , ரசிகர்களின் கவனம் அங்கே குவிந்துவிடக்கூடும் என்று நினைத்தாரோ என்னவோ , மிகவும் சராசரியான , பக்கத்து வீட்டுக்கார பெண் போல ஒரு நாயகியை கிரேஸ் ஆண்டனியை நடிக்க வைத்திருக்கிறார். தோற்றம் என்னய்யா தோற்றம் , காதல் கணவனின் கடனை அடைக்க , காசு கொடுத்து வாட்டர் பாட்டில் கூட வாங்கமால் , ரூமுக்கு ஆட்டோவில் கூட போகாமல் காசை மிச்சம் பிடிக்கும் இடத்திலும் மற்றவர்களுக்கு உதவும் இடத்திலும் பேரழகியாக மிளிர்கிறார்.

ஞ்சலி , ஷிவாவின் வகுப்புத்தோழியாக வந்து நிறைவாக நடித்திருக்கிறார்.

எம்பரர் லாட்ஜ், அருமை .. நிஜமாகவே அது இந்த மண்ணை ஆண்ட எம்பரர்களில் ஒருவரால் வழிப்போக்கர்களுக்கு கட்டியதாக்கத்தான் இருக்க வேண்டும் .

வீட்டிற்குள்ளேயே வளர்ந்தால் முட்டிலி வரத்தான் செய்யும் , மூட்டுகள் பலம் பெற மலை, மரம் ஏறத்தான் வேண்டும், ஏறி இறங்கத்தான் வேண்டும் , ஓடி ஆடத்தான் வேண்டும், குளத்தில் நீச்சல் அடிக்கத்தான் வேண்டும், முக்கியமாக இந்திய முறை டாய்லெட் போக பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏகாம்பரத்தின்ளிப்பதிவில் , மலைகளும் வயல்வெளிகளும் காடுகளுமாக கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றன. படத்தில் அவர் காட்டியிருக்கும் மலைகளை ஒரு முறை படத்திலாவது சென்று பார்த்து விடுங்கள் , இன்னும் சில ஆண்டுகளில் அவை உடைத்தெறியப்பட்டுவிடக்கூடும் , முட்டாள் ஆட்சியாளர்களால் !

சமீப காலமாக மதன் கார்க்கி வசனம் தானே எழுதிக்கொண்டிருக்கிறார் , அட இதில் வசனங்கள் இடத்தை ஆக்ரமித்து நிறைய பாடல்கள், ரசிக்கும் படி அவற்றிற்கு இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி.

கிராமத்திற்கு சென்று விடலாமா ? அங்கே சாதி என்னென்னு கேட்பாங்க …

வட நாட்டிற்கு சென்றுவிடலாமா ..? அங்கே மதம் என்னென்னு கேட்பாங்க …

கழுத்தில் சிலுவையுடன் வரும் தங்கையின் மதவெறி ,தமிழகத்தில் வே ராமசாமி சாதியை ஒழித்தார்னு சொல்லிக்கிட்டு இருப்பதெல்லாம் பொய்யா என்று மக்களை சிந்திக்க வைத்திருப்பது , வட இந்தியாவில் நீ இந்துவா என்று மதம் கேட்டு சுட்டுக்கொன்ற இஸ்லாமிய தீவிரவாதம் என்று மறைமுகமாக ஒரு பிடி பிடித்திருக்கிறார் ராம் !

பறந்து போ, குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் !