a K. Vijay Anandh review
Lokah Chapter1Chandra தமிழிலும் லோகா என்ற பெயரில் வெளியாகி உள்ளது. டொம்னிக் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து இருக்கிறார்.டொவினோ தாமஸ் கெஸ்ட் ரோலில் வருகிறார்கள். துல்கர், சவுபின்ஷாகீரும் அடுத்த பக்கத்துக்கான ஒரு முன்னோட்டமாக வந்து ரசிகர்களை குஷிப்படுத்துக்கிறார்கள்.
கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் பவர் கொண்ட யட்சி ஆக நடித்து அசத்தியிருக்கிறார். அவருக்கும் எதிர் வீட்டு இளைஞனுக்கும் வரும் நடபு , அவனது நண்பர்களுடனான காட்சிகள் சுவராஸ்யத்தை கொடுக்கின்றன. இவ்வளவு குழந்தை தனமான முகத்திற்குள் அவ்வளவு கொடூர முகமா என்று ஆச்சிரியப்பட வைத்திருக்கிறார் . பல நூறு ஆண்டுகளாக ரத்தம் குடித்தே அதுவும் ஓ மைனஸ் ரத்தம் குடித்தே வாழ்கிறார் என்பதை மிகவும் இயல்பாக சொன்னாலும் , நமக்கு பயம் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது.
அமைதியான போலீஸ் இன்ஸ்பெக்டராக அறிமுகமாகும் சாண்டி , இறுதிக்காட்சியில் சர்ப்ரைஸ் தருகிறார்.
வழக்கம்போல் இந்த படத்தில் கதை, திரைக்கதை, நடிகர்கள் தேர்வு, நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறது மலையாள சினிமா.
வழக்கம்போல், தமிழ் டப்பிங்கை ஆர்.பி.பாலா R P பாலா சிறப்பாக செய்து இருக்கிறார்.