a K. Vijay Anandh review
இதெல்லாம் வழக்கமா பாலா, கடந்த சில வருடங்களாக செய்துகொண்டிருக்கும் சேவைகள் தாம்., ஒரு டாகுமெண்டரி ஃபீல் வந்துவிடக்கூடாது என்பதற்காக, நிஜத்தில் சட்டென இளகும் குணம் கொண்ட பாலாவை படத்தில் கொஞ்சம் கறார் பேர்வழியாக காட்டி அத்துடன் ஒரு இல்ல இல்ல இரண்டு அழகான காதலைச் சொல்லி, நிறையவே எமோஷன்ஸ் கலந்து காந்தி கண்ணாடியை இயக்கியிருக்கிறார் ஷெரீப், கிளைமாக்ஸில் அழவும் வைத்துவிடுகிறார்கள்.
நாயகனின் வேலையாக ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் காட்டிருப்பதிலிருந்து இயக்கு நரின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.
பாலா விற்கு மிகவும் பொருத்தமான வேடம், கச்சிதமாக பொருந்திப்போகிறார். தொலைக்காட்சி ஸ்டேண்ட் அப் காமெடிகளுக்கும் சினிமா நடிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அவர் , நடிகராக சினிமாவில் காட்டும் உடல்மொழிகள் அழகு அல்லது நிறைவு. 60 ஆம் கல்யாணத்திற்கு அட்வான்ஸ் வாங்கி, இறுதிச்சடங்கு செய்யும் நிலை , ரசிகர்களையும் அழவைக்கும் காட்சியமைப்புகள். பிரேக் அப் சொல்லிவிட்டு போகும் நாயகியை துரத்திச்சென்று, அவள் கூற்றை பொய்யாக்கும் காட்சியில் தனுஷ் படங்களை நினைவு படுத்துகிறார்.
நமீதா கிருஷ்ணமூர்த்தி, கிடைக்கும் கொஞ்ச நஞ்ச இடங்களில் ஒட்டுமொத்தமாக அவர் பக்கம் இழுத்துவிடுகிறார்.
பாலஜி சக்திவேல் – அர்ச்சனா இணை பாலுமகேந்திரா கூட கற்பனை செய்யாத கதாபாத்திர அமைப்பு. ஊருக்கு தெரிஞ்சே பொண்டாட்டி நாலஞ்சு வைப்பாட்டினு வாழும் ஜமீன்களைத்தான் சினிமாக்களில் பார்த்திருப்போம். ஆனால், காதலித்த கண்ணம்மாவை ஊரில் இருந்தால் கைப்பிடிக்க முடியாது என்கிற நிலையில், அத்தனை கோடி சொத்துக்களையும் விட்டுவிட்டு நகர்ப்புறம் வந்து செக்யூரிட்டி வேலைபார்ப்பதும், நாலைஞ்சு வேலைக்காரர்களை வைத்து வேலைவாங்கிக்கொண்டு ஜமீன் மனைவியாக இருக்கவேண்டிய அர்ச்சனா , இன்னொரு வீட்டில் வேலைக்குப்போவதும், ஷெரீப் பின்னிட்டீங்க ! பாலாஜி சக்திவேல் , நடிகராக ஏற்கனவே நிரூபித்துவிட்டாலும், இன்னொரு கதாநாயகனாக வந்து இதில் அசத்தியிருக்கிறார். அர்ச்சனா, லெஜண்ட் ஆல்வேஸ் லெஜண்ட். இருவரின் இளவயது கதாபாத்திரங்களாக வருபவர்களும் சிறப்பான தேர்வு.
அமுதவாணன், நகைச்சுவையும் குணச்சித்திரமும் கலந்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.
அப்படி ஒரு கண்ணாடி வரைஞ்சு, ஒரு கோட்டினை வளைச்சு விட்டால் அனைவருக்கும் தெரியும் அது காந்தி மற்றும் காந்தி கண்ணாடி என்று. சர்வதேச அளவில் அப்படி ஒரு நூற்றாண்டு பிரபலமான விஷயத்தை படத்தின் தலைப்பாக வைத்ததற்கும் படக்குழுவை பாராட்டலாம்.
உதவி கேட்டு யாராவது வந்தால், உடனே செய்துவிடுங்கள், அவர்களை நம்மிடம் அனுப்புவது இந்த பிரபஞ்சம் ! அது ஒருவேளை நாம் மனிதர்கள் தான் என்பதை நினைவூட்டக்கூட இருக்கலாம் !
நல்ல கருத்தை விதைத்த நல்ல சினிமாவாக காந்தி கண்ணாடி !