a K.Vijay Anandh review
ஜெ.எம் பஷீர் , பசும்பொன் முத்துராமலிங்க தேவராகவே வாழ்ந்திருக்கிறார். வீரமும் விவேகமும் நிறைந்த தேவரய்யாவின் உடல்மொழிகளை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். மேடைகளில் பேசும் போது, வேட்டி பறந்துவிடாமல் தனது கால்களுக்கு இடையே சொருகி வைத்துக்கொள்ளும் தேவரய்யாவின் வழக்கத்தை ஜெராக்ஸ் காபி போல பிரதிபலித்து ஆச்சிரியப்பட வைத்திருக்கிறார்.
பல ஆயிரக்கணக்கான தன் சொந்த நிலங்களை பலவேறு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக ஹரிஜனங்கள் என்று அழைக்கப்படுவர்களுக்கு எழுதிவைக்கும் தேவரய்யா எப்படி.? மறவர் சமுதாயம் நீங்களாக மற்ற சமூகத்தினருக்கு எதிரியாக இருந்திருக்க முடியும்..?
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அவர் செய்தது இரண்டே தவறுகள் தாம்,
ஒன்று…
சுதந்திரப்போராட்ட இந்தியாவில் அவர் காந்தி மற்றும் நேருவின் தலைமைகளை புறக்கணித்து நேதாஜி வழியில் சென்றது, சென்றதோடு மட்டுமல்லாமல் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்கிற பழமொழிக்கு ஏற்ப நேதாஜிக்கு அவரின் ஆயுதமேந்திய இராணுவ போராட்டத்திற்கு ஒத்துழைத்து, ஆட்களை அனுப்பியது.
இரண்டு…
சுதந்திர இந்தியாவில், இந்தியாவின் முன்னேற்றங்களுக்கு சிறிதும் உதவாத நேருவின் கொள்கைகளுக்கு மாற்றாக ஒன்றை உருவாக்க முயன்றது. குறிப்பாக பார்வேர்ட் பிளாக் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது. உயிரோடு இருக்கும் நேதாஜி, மரணமடைந்துவிட்டார் என்று பிரதமாரக அறிக்கை வெளியிட்ட நேருவுக்கு எதிராக நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறார் நான் அவரை சந்தித்து வந்திருக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவித்தது.
அப்படி வங்கத்துச் சிங்கம் நேதாஜிக்கு துணை நின்ற தென்னாட்டுச் சிங்கமான தேவரய்யா அகில இந்திய அளவில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகியிருந்தால், நேருவின் குடும்பம் 1960 க்கு முன்பே அரசியலில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கும். இந்தியா எப்போதோ வல்லரசாகியிருக்கும்.
அப்படி ஒரு அகில இந்திய தலைவராக தேவரய்யா உருவாகிவிடக்கூடாது என்பதற்காக, அவரை நேரிடையாக அரசியல்ரீதியாக கொள்கை ரீதியாக எதிர்க்க தைரியமில்லாத காங்கிரஸ் மத்திய – மாநில ஆட்சியாளர்கள் இமானுவேல் சேகரன் ஐ வைத்து , தேவரய்யாவை ஒரு சாதிவெறி பிடித்த தலைவராக மக்கள் முன் உருவக்கப்படுத்தி அவரை பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கி , பொதுவாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
அஹிம்சை வழியில் தான் சுதந்திரம் என்று நேதாஜியை எதிர்க்கும் நேரு, சுதந்திர இந்தியாவில் தனது பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்தி மாநில காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து மறவர் சமுதாய மக்களை துப்பாக்கியில் சுட்டுக்கொல்கிறார். அதாவது, நாட்டை சூறையாட வந்த கிறுத்துவனை துப்பாக்கி முனையில் சந்திக்கக்கூடாதாம், சக இந்தியர்களை பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கி யாருக்கும் தெரியாமல் சுட்டுக்கொல்வாராம் ! என்னங்கடா உங்க அஹிம்சை ?
சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு உன்னத தலைவனாக உருவாகியிருக்கவேண்டிய ஒரு தமிழரை தனது அதிகார துஷ்பிரயோகத்தால் நசுக்கிய நேரு மற்றும் காங்கிரஸின் முகத்திரையை மிகவும் துணிச்சலாக கிழித்து அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ்.
ஒருவன் இந்து மதத்திலிருந்து வெளியேறி, கிறுத்துவ மதத்தை தழுவிவிட்டாலே அவனது சாதிய அடையாளங்களை இழக்கிறான் என்கிற அம்பேத்கரின் சட்டத்திற்கு புறம்பாக, ஹரிஜன மக்களின் பிரதி நிதியாக கிறுத்துவத்தை தழுவிய இமானுவேல் சேகரனை உருவக்கி இராமநாதபுரம் மாவட்டத்தில் சாதியக்கலவரங்களுக்கு வித்திட்டு ஒரு அழிக்க முடியாத கறையை காங்கிரஸ் ஏற்படுத்தியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
தேசியமும் தெய்வீகமும் என்று மக்களை இந்தியர்களாக இந்துக்களாக இணைக்கும் தேவரின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக காங்கிரஸ் புளாங்கிதம் அடைந்திருக்கலாம்.
இமானுவேல் சேகரனின் கொலை வழக்கில் தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்க தேவர் கோர்ட்டில் எடுத்து வைக்கும் நீண்ட வாதங்கள் தொடர்பான காட்சிகள் சிவாஜிகணேசன் நடித்த பராசக்தி பட நீதிமன்ற காட்சிகளை நினைவு படுத்துகின்றன. அந்தக்காட்சியில் ஜெ.எம் பஷீர் சிறாப்பாக நடித்திருக்கிறார்.
வக்கீல்களாக வரும் ராதாரவி, அரவிந்த்ராஜ் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சாதி பேதங்கள் இன்று மதுரை மீனாட்சி , அனைவருக்குமான அம்மா என்பதை தாழ்த்தப்பட்ட சிறுமி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட காட்சி அற்புதம்.
காமராஜரய்யா குறித்தான தேவரின் பார்வையை நாம் விமர்சிக்க இயலாது, ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒன்றாக பயணித்தவர்கள், ஒருவரையொருவர் நன்கு அறிந்துவைத்திருப்பவர்கள். சந்தர்ப்பங்கள் அவர்களை ஒன்றிணைத்தோ முரண்பாடாகவோ பயணிக்க வைத்திருக்கின்றன. இரண்டு மணி நேரங்களுக்குள் கதை சொல்லப்பட்டிருக்கும் போது, காட்டப்பட்ட ஒரே ஒரு காட்சியை வைத்துக்கொண்டு, தமிழகத்தின் அரசியலைத்தீர்மானிக்கும் இரண்டு பெரிய சமூகங்களுக்கிடையே தேவையில்லாத சர்ச்சைகள் தோன்ற இடமளிக்கக்கூடாது. அந்த இரண்டு சமூகங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தினருக்கும் மாநில வளர்ச்சி அதன் மூலம் தேசவளர்ச்சி என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கவேண்டும்.
தேவரின் வீட்டில், கடவுள் முருகன், வள்லலார், நேதாஜி ஆகியோரது புகப்படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருக்கும் காட்சி அழகு, தேவருக்கு பிறகு தமிழர்களின் வீடுகளில் அந்த மூன்று புகைப்படங்களுடன் தேவரய்யாவின் புகைப்படமும் இடம்பெற்றுவிட்டது, குறிப்பாக இராமநாதபுர மாவட்ட மக்கள் வீடுகளில்.
2026 தமிழக சட்டசபைக்கான தேர்தல் வரவிருக்கும் இந்த நேரத்தில் மிகவும் சரியான காலகட்டத்தில் தேசிய தலைவர் படம் வெளியாகியிருக்கிறது. இது, நிச்சயம் 2026 தேர்தலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும், தேச துரோக காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக்கட்சிகளை அரசியலிலிருந்து நிரந்திரமாக அப்புறப்படுத்தவேண்டும் என்கிற விழிப்புணர்ச்சியை தேசிய சிந்தனை கொண்ட தமிழக வாக்காளர்களிடையே ஏற்படுத்தும்.
இந்த அற்புதமான படத்தை தயாரித்திருக்கும் எஸ் எஸ் ஆர் சத்யா, எஸ் ஜெனிபர் மார்கிரேட் ஆகியோருக்கு பாராட்டுகள்.
இசைஞானி இளையராஜாவை பற்றி சொல்லவும் வேண்டுமோ !
பிகு: சுதந்திர இந்தியாவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு அரசியல் சக்தியாக உருவாகியிருந்தால், காங்கிரஸ் முற்றிலுமாக அழிந்திருக்கும், தேசியமும் தெய்வீகமும் என்கிற கொள்கை கொண்ட தேவருக்கு மாற்றாக , பாஜக என்கிற கட்சி கூட தோன்றி இருந்திருக்காது.
அந்த வகையில், தி.க வே மூடப்பட்டிருக்கும் அப்புறம் எங்கிருந்து திமுக ? எப்படி மு. கருணாநிதி..?
அது தான் யதார்த்தம்.
அப்படி இருக்கும் போது, முக ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு அடிக்கப்பட்ட போஸ்டர்களில், அவர்களிருவரும் பெரிதாகவும், ஜெ.எம்.பஷீர் தேசிய தலைவர் தேவர் பெருமகனார் கெட் அப்புடன் அவர்களுக்கு கீழாகவும் இடம்பெற்றதை பார்க்க முடிந்தது, அது பசும்பொன் தேவரைப்பற்றி முழுமையாக அறிந்த பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஜெ.எம்.பஷீராக அவரது இயல்பான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தால் இந்த வருத்தங்கள் களையப்பட்டிருக்கலாம் !