மாண்புமிகு பறை

mysixer rating 3.5/5

203

a K Vijay Anandh review

அழிந்து வரும் அல்லது சாவு வீட்டுக்கு மட்டுமே இசைக்க வேண்டும் என்கிற நியாயம் இல்லாத நிர்பந்தத்திற்கு உட்படுத்தப்படும் பறை இசையையும், இசைக்கலைஞர்களின் வாழ்க்கையையும் அத்துடன் ஆணவக் கொலை என்று சொல்லப்படுகிற சாதி மறுப்பு திருமணங்களில் நடக்கும் கொலையையும் அழகாக கோர்த்து மாண்புமிகு பறை யை இயக்கி இருக்கிறார் எஸ் விஜய் சுகுமார்.

லியோ சிவகுமார் தனது நண்பருடன் இணைந்து கிராமத்தில் குழந்தைகளுக்கு பறை இசை கற்றுக் கொடுப்பதுடன், சாவு வீட்டிலும், சில குறிப்பிட்ட கோயில்களுக்காகவும் பறை அடிப்பதில்லை என்கிற வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்.

நடுவில் லியோ சிவகுமார் காயத்ரி உடன் காதல் வயப்படுகிறார்.

லியோ சிவகுமாரின் , நண்பர் படுகொலை அதனை தொடர்ந்து லியோ சிவகுமாரும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

நண்பன் எப்படி கொல்லப்பட்டான் என்று அறிய வரும் பொழுது லியோ சிவகுமாரும் கொல்லப்படுவதும், லியோ சிவகுமார் எப்படி கொல்லப்பட்டார் என்பதை அவரது மனைவியாக காயத்ரி அறியும் போதும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் பார்த்த அனுபவத்தை இயக்குனர் கொடுக்கிறார்.

லியோ சிவகுமார், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார், அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இவருக்கும் காயத்ரிக்கும் உடனான காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் சுவாரசியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கிளைமாக்ஸ்சில், ஆக்ரோஷமாக பறை அடிக்கும் காயத்ரியை பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போவது நிச்சயம்.

உணர்ச்சி பிழம்பான அந்த காட்சி, மிகவும் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

பறை இசை ஓய்ந்துவிடும் என்கிற நினைப்பில் இருக்கும் அந்த கிராம வாசிகளுக்கு திரும்பவும் காயத்ரி கைகளில் இருந்து பறை இசை விண்ணைப் பிளக்கும் என்பதாக முடிக்கப்பட்ட மாண்புமிகு பறை திரைப்படம் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய ஒன்று.

கலைகளிலும் சாதி பார்க்கிறது உலகம். அதை களையும் வரை செய்வோம் கலகம் என்கிற பாடல் வரிகள் அற்புதம்.

மாண்புமிகு பறை, நமது சொத்து!