Mark

mysixer rating 4/5

38

a K Vijay Anandh review

2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் பிடிபடுகிறது, குற்றவாளிகளோடு குற்றவாளியாக அழைத்து வரப்படும் நாயகன், சுதீபா…

தம்பி விக்ராந்தை, மினிஸ்டர் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்து தங்கள் மீது இருக்கும் வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது காதலியுடன் ஓடிப்போன தம்பியை வெறிபிடித்து தேடும் அண்ணன் நவீன் சந்திரா…

மரணப்படுக்கையில் இருக்கும் முதலமைச்சரிடம், அடுத்த வாரிசு நான் தான் என்று கையெழுத்து போட சொல்லி வற்புறுத்தி போடாத நிலையில் அவர் கையெழுத்தை தானே போட்டுக் கொண்டு அம்மா என்றும் பாராமல் கொன்றுவிடும் மகன் ஆதிகேசவனாக, ஷைன் டாம் சாக்கோ ..

இந்தக் கொலையை படம் பிடிக்கும் டாக்டர், அப்படி ஒரு டாக்டர் நம்மூரில் இல்லாமல் போய்விட்டாரே என்று ஏங்க வைத்து விடுகிறார்கள்.

காதலியை அழைத்துக் கொண்டு போய் வெளிநாட்டில் செட்டில் ஆவதற்கு தேவைப்படும் டாலருக்காக 16 குழந்தைகளை கடத்தும் விக்ராந்த்…

காணாமல் போன 18 குழந்தைகளின் நாயகன் கிச்சா சுதீபா மருமகளும் ஒருவர் என்று அறிந்து துப்பு துலக்க ஆரம்பிக்கும் நாயகன் …

இப்படி ஒரே நாளில் நடக்கும் ஆறு பரபரப்பான சம்பவங்களும் ஒற்றைப் புள்ளியில் குவிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு சுபமாக முடிவது தான், மார்க் படத்தின் கதை.

கே ஜி எஃப் போன்ற படங்களை நம்மால் கொடுக்க முடியுமா என்று இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது, கிட்டத்தட்ட அதற்கு நிகரான படங்களாக சுதீபாவை வைத்து, கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் நம்மூர் இயக்குனர் விஜய் கார்த்திகேயா .

மேக்ஸை தொடர்ந்து மார்க், நேர்மையான காவல்துறை அதிகாரி நிழலுலக தாதாக்கள் என்று மார்க் படமும் ஜெட் வேகத்தில் நகருகிறது.

சுதிபாவின், அறிமுகக் காட்சி அதிரடி சண்டைகளும் பாடலுமாக அட்டகாசப்படுத்தி இருக்கிறார். இசையமைத்திருக்கும் பி அஜனிஸ் லோக்நாத் மற்றும் நடன அமைப்பாளர்கள் சண்டை பயிற்சியாளர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுகளை வழங்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக கிச்சா சுதீபாவின் மாசான உடல் மொழி அழகு.

இன்னொரு பக்கம் நவீன் சந்திரா, உடலில் ஒரே ஒரு டவுசர் கையில் ஆயுதம் என்று அறிமுகமாகி பயமுறுத்தி இருக்கிறார்.

அப்படி ஒரு குடும்பத்திலிருந்து வரும் விக்ராந்த், தனது மாமா சுப்பு பஞ்சுவுடன் சேர்ந்து செய்யும் க்ரைம் பயமுறுத்தும் ரகம்.

யோகி பாபு, சில காட்சிகளே வந்தாலும், மிகவும் சரியாக பயன்படுத்தப்பட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

ஸ்டீபன் ராஜாக வரும் குரு சோமசுந்தரம், வழக்கமான தனது வித்தியாசமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

இடைவேளை வரை ஜெட் வேகத்தின் பயணிக்கும் கதை, இரண்டாவது பாதியில் மெதுவாக ஆரம்பித்தாலும், நீர்மட்டம் உயர உயர பரிதவிக்கும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட அட்வென்சர் காட்சி அமைப்புகள் ரசிகர்களுக்கு நிறைவான ஒரு திருப்தியை கொடுத்து விடும் என்றால் மிகை அல்ல.

லாஜிக் எல்லாம் பார்க்காமல், அதிரடி ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு முழுமையாக விருந்து படைத்திருக்கிறார்கள்.