இதுதான் வெற்றி என்பதா…- செளந்தர்யா ரஜினிகாந்த்

7
  • K.Vijay Anandh

நேற்று இல்லாத மாற்றம் என்னது

தம்பி (மகேஷ் ராஜ் பசிலியன் ) என் காதில் ஏதோ சொன்னது

இதுதான் வெற்றி என்பதா

கனவு வென்று விட்டதா

நம்பிக்கை பிறந்துவிட்டதா

இறங்கி அடி மனமே ….

ஆர் ரஹ்மான் இசையில் சுஜாதா பாடிய சூப்பர் ஹிட்டான பாடலை, வித் லவ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து செளந்தர்யா ரஜினிகாந்த் , இப்படித்தான் பாடியிருக்கக்கூடும் .

மகேஷ் ராஜ் பசிலியனுடன் இணைந்து தான் தயாரித்த வித் லவ் திரைப்படம் வெற்றியடைந்திருப்பது குறித்து செளந்தர்யா ரஜினிகாந்த், ” படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . தம்பி, என் காதில் அக்கா இவ்வளவு வசூல் என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது என்று சொன்னார்போயஸ் கார்டானில் அப்பாவை சந்திக்க சென்றேன் .. கட்டிப்பிடித்து ம்ம்ம்ம் என்கிறார்அப்பொழுது தான் முதன்முதலாக உணர்ந்தேன் , “இது தான் வெற்றியென்பதா ..” என்றுஇந்த வெற்றி கொடுத்த தன்னம்பிக்கையுடன் , தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன் , புதிய திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுப்பேன்..” என்றார்.

அக்காவுக்கும் எனக்குமான உறவு வித் லவ் படத்தில் இருந்து தொடங்கியது அல்ல. எனது முதல் படம் தயாரிக்கும் முன்னரே அவருடன் நான் பழகிக்கொண்டிருக்கிறேன் . அவரது பெரிய சப்போர்ட் எனக்கு கடந்த 10 வருடங்களாகவே எனக்கு கிடைத்து கொண்டிருக்கிறதுநாங்கள் இருவரும் தொடர்ந்து பயணிப்போம் ..” என்றார்.

வித் லவ் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து , இருவரும் தமிழக முதல்வர் மு.. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.