a K Vijay Anandh review
கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகி இருக்கிறது, செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்.
விஜய ராகவேந்திரா நடிக்க, தேவிபிரசாத் ஷெட்டி இயக்கி உள்ளார். இசை நவ்னீத் ஷாம், ஒரு பரபரப்பான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் வீணையை சும்மா மீட்டு மீட்டு என்று மீட்டி இருக்கிறார். எதற்காக அப்படி வீணைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக இதுபோன்ற கிரைம் திரில்லர் படங்களின், கதைக்களம் பெருநகரங்களாக இருக்கும். இந்தப் படத்தில், மங்களூர் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் காட்சிகளை மிகவும் அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள்.
மிரட்டிவிட்டார் இயக்குனர் என்றே சொல்ல வேண்டும். மங்களூர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டஷனில் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கிறார் ஹீரோ..அந்த ஏரியாவில் ஒரே பாணியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. இரண்டு பேரை சந்தேகப்பட்டு விசாரிக்கிறார். ஆனால் அவர்கள் கொலையாளி இல்லை, என்பது தெரிகிறது.
இந்த கொலைகளுக்கான காரணம் என்ன? அப்படி கொடூரமாக கொலை செய்வது ஏன்? கொலையாளி சிக்கினாரா என்பதை மிகவும் உணர்வுபூர்வமாக தனிநபரின் பழிவாங்கல் அதுவும் தனது அக்காவை அநியாயமாக பறிகொடுத்த தம்பியின் பழிவாங்கல் என்பதாக, அதிலும் இசை மீது ஆர்வமுள்ள அக்காவின், இழப்பின் வலியில் செய்யப்படும் பழிவாங்கல் என்பதை அறியும் பொழுது நமக்கே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போகிறது மனம்.
படத்தின் மேக்கிங், திரில்லர், கொலை விசாரணை, நடிகர் என அனைத்திலும் மிரட்டி இருக்கிறார்கள். கதை மாந்தர்களாக நடித்திருக்கும் ஒவ்வொருவரும் சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
ஒரு பக்கம் கே ஜி எஃப் போன்று பிரம்மாண்டம். இன்னொரு பக்கம் காந்தாரா போன்று ஆன்மீகம், அடுத்த பக்கம் நமது கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் இது போன்ற அழுத்தமான கதைகள் என்று கன்னட சினிமா நிஜமாகவே இந்திய சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
Second Case of Sitaraman, ஐ எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.