a K Vijay Anandh review
அலைகள் ஓய்வதில்லை காலத்து கதை தான், இதிலும் ஆழ்கடலில் அலைகள் ஓயாமல் அடித்துக் கொண்டு படம் முழுவதும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.
ரசல் பூக்குட்டியை வைத்து, ஆழ்கடலில் எழும் ஓசையை அற்புதமாக பதிவு செய்து ரசிகர்களுக்கு புதிய ஒரு பொழுதுபோக்கு விருந்து கொடுத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான காந்தி டாக்ஸ், படம் போலத்தான், அதில் வசனங்களே இல்லை. இந்த படத்திலும், மிகக்குறைவான வசனங்கள். காந்தி டாக்ஸ் படத்தில் வரும் சில குறுஞ்செய்தி அனுப்பும் விஷயங்களை வசனங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆழி, இன்னொரு காந்தி டாக்ஸ்.
போட் மெக்கானிக்காக இருக்கும், சரத்குமாரின் மகள் தேவிகா சதீஷை காதலிக்கிறார் எளிய குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித்.
அவ்வளவுதான், இந்திரஜித் ஐ தூக்கி படகில் போட்டுக்கொண்டு, ஆழ் கடலுக்கு சென்று விடுகிறார் சரத்குமார்.
இந்திரஜித் ஐ கொன்று, கடல் சுறாக்களுக்கு உணவாக போடுகிறாரா என்பது தான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
சரத்குமார், இந்திரஜித் மற்றும் சரத்குமார் வளர்க்கும் ஒரு நாய் ஆகிய மூன்று கதாபாத்திரங்களுடன் படத்தின் பெரும் பகுதி கடலுக்குள் , அதுவும் ஒரு படகிற்குள் நடக்கின்றது.
சர்வதேச தரத்திலான ஒரு பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு பிரமிலும் மெனக்கட்டி இருப்பது தெரிகிறது.
நடுவில், போட் என்ஜினுக்குள் சிக்கிக்கொள்ளும் சரத்குமார். அவர் காப்பாற்றப்பட்டாரா..? இந்திரஜித் என்ன ஆனார் ? என்று பயணித்து உணர்ச்சி பெருக்கான ஒரு கிளைமாக்ஸை கொடுத்திருக்கிறார் இயக்குனர், மாதவ் ராமதாசன்.
நாயகனின் பெற்றோர்களாக வரும் வையாபுரி மற்றும் தாமரை ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில், நிறைவாக நடித்திருக்கின்றார்கள்.
நாயகி தேவிகா சதீஷ், கொள்ளை அழகு, தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடிக்கும் அழகு.
சரத்குமாருக்கு, இது ஒரு ஆங்கில படம் போல அமைந்திருக்கிறது. அவரது நடை உடை பாவனைகள் மற்றும் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் போன்றவை, சமீபத்தில் தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து அதில் தனது அர்ப்பணிப்பான நடிப்பால் இயக்குநர்களையும் ரசிகர்களையும் திருப்தி படுத்தி விடுகிறார் .
ஆழி, ஆலிவுட் படம் போன்ற ஒரு தமிழ் படம்!