a K Vijay Anandh review
அரசியல்வாதிகள் லோக்கல் ரவுடிகள் மற்றும் ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகள் ஆகியோர் கூட்டணியுடன், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் நடக்கும் ஊழல்களை ஒரு திகில் படம் பாணியில் திரைக்கதை அமைத்து பயமுறுத்து இருக்கிறார் இயக்குனர் சுந்தரபாண்டி.
தீப்சிகாவுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழும் , ஆரி அர்ஜுனன் ஒரு கட்டத்தில் பிரிந்து விடுகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, தீப்சிகாவிடம் இருந்து வரும் ஒரு தொலைபேசி அழைப்பு.
அதனைத் தொடர்ந்து மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் ஆரி. அவர் தங்கும் கம்பெனி கெஸ்ட் ஹவுஸில், அது இருக்கும் அப்பார்ட்மெண்டில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களை காட்டி பயமுறுத்தி இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், அந்த தொலைபேசி அழைப்பு இறந்து போன தனது மனைவிடம் இருந்து வந்தது என்று அறியும் பொழுதும், அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்பதை அறியும் பொழுதும் உடையும் ஆரி சிறப்பாக நடித்திருக்கிறார்.
எக்ஸ்பைரி ஆகிவிட்ட உணவு பொருட்களை உண்டு மயங்கி சுருண்டு கிடக்கும் தனது குழந்தையை பார்த்து பதைபதைக்கும் ஆரி, மகாநதி கமல்ஹாசனை நினைவுபடுத்துகிறார்.
இரண்டாவது பாதியை இன்னும் கொஞ்சம் வேகமாகவும் சுருக்கமாகவும் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒரு திகில் படத்திற்கு தேவையான இசையை வழங்கி இருக்கிறார் தரன்.
முன்பே குறிப்பிட்டது போல, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் நடக்கும் ஊழல்களை பேராசை பிடித்த அரசியல்வாதிகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் லோக்கல் ரவுடிகளை படம் பிடித்து காட்டி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய விதத்தில் ஆர் சுந்தரபாண்டியை பாராட்டலாம்!