டாப் ஸ்டார் பிரஷாந்தின் பிறந்த நாளும், அவரது தந்தையும், நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கத்தில் தற்பொழுது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பும், வழக்கம்போல பிரஷாந்த் கோல்ட் டவரில் கோலாகலமாக நடந்தது .
ஆர் கே செல்வமணி, விஷால், ஆர் கே சுரேஷ், ஸ்ரீ கணேஷ் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டு பிரஷாந்திற்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னதோடு தற்பொழுது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் வெற்றி அடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
முன்னணி தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் ஹரி மற்றும் ராஜகுமாரன் தேவயானி தம்பதியரின் மகள் பிரியங்கா ஆகியோர் அறிமுகமாகும் இந்த படத்தில் பிரஷாந்த், மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரஞ்சன் தி அட்வகேட் இன்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
சாந்தி தியாகராஜன் தயாரிக்க ஸ்டார் மூவிஸ் பிரீத்தி தியாகராஜன் வழங்க தியாகராஜன் இயக்கியிருக்கும் இந்த படம் ஒரு விறுவிறுப்பான கோர்ட் டிராமாவாக ரசிகர்களை மகிழ்விக்க விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்தப் படத்தின் இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் நிகழ்ச்சியில் பேசும் பொழுது, ” நான் அறிமுகமான வெயில் படத்திற்கு முன்னாடியே தியாகராஜன் சார் மற்றும் பிரசாந்த் சாருக்கு படம் பண்ண வேண்டியது . அருண் வெட்ஸ் ஹரிணி என்கிற படத்திற்கு இசையமைக்க எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். அதுவே எனது முதல் படமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் ஏனோ அது நடக்கவில்லை. அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் என்னிடமே இருக்கிறது. 20 வருடங்களுக்குப் பிறகு, அவர்களுக்காக அவர்களது படத்தில் இசையமைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. …” என்று கூறினார்.
