Hi

Rating 4/5

52

a K Vijay Anandh review

பொதுவாகவே Feel Good படங்களை பார்த்துவிட்டு … ச்சே… ஒரு கவிதை மாதிரி எடுத்துருக்காய்ங்கடா… என்று பீல் பண்ணுவோம். இந்த இயக்குனர் விஷ்ணு எடவன்  நிஜமாகவே அடிப்படையில் பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார், விடுவாரா ? ஹாய் படத்தை அழகான ஒரு கவிதையாகவே கொடுத்திருக்கிறார்.

சாய் அபயங்கர் கைண்ட் ஆஃப் இசையிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வழக்கமான பாடல்களாக இசையமைத்து ஜென் மார்டினும் இயக்குனருக்கு கச்சிதமாக கை கொடுத்திருக்கிறார்.

முதலில் கே பாக்யராஜுக்கு வருவோம், திரைக்கதை  ஜாம்பவான், இயக்குனர், நடிகர் கே பாக்யராஜ் நடித்த கடைசி படம் இதுவாக இருப்பின், அவருக்கு அற்புதமான செண்ட் ஆஃப் பிரியாவிடை என்று சொல்லலாம்.  இவர் ஒருவருக்கு தான் சண்டைக்காட்சி, அப்போ அவர் தானே ஹீரோ அந்தளவுக்கு ஆக்‌ஷனிலும், மகனிடம் காட்டும் அன்பிலும்  நிறைவாக நடித்திருக்கிறார்.

நயன் தாரா, ஒரு  நல்ல அழுத்தமான அழகான கதாபாத்திரம், இவரை விட்டால் வேறு யார் ? என்கிற அளவிற்கு ரெகுலர் நாயகியாக கம்பேக் கொடுத்திருக்கிறார். திருமணம் ஆகாத, திருமண வயதில் இருக்கும் இளம்பெண் என்கிற மிகவும் அற்புதமாக விஷ்ணு எடவனால் படைக்கப்பட்ட  தேவயானி கதாபாத்திரத்திற்கு  உயிர் கொடுத்திருக்கிறார்.

கவின், நாயகனின் கதாபாத்திர பெயரே அழகு, மயில்சாமி, அதுவும் மயில் மயில் என்று மற்றவர்கள் அழைக்கும் போது, ஒரு ஆம்பள ஸ்ரீதேவியாக வசீகரித்திருக்கிறார். ஒரு பெரிய குடும்பத்து செல்லப்பிள்ளை, ஒரே ஆண் வாரிசு அவரைச்சுற்றி மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, தங்கைகள் என்று உறவுப்பட்டாளமே இருப்பது வருஷம் 16 ஐயும்  நினைவு படுத்தியது.

ராதிகா சரத்குமார், அன்பான அம்மாவாக இவரை விட்டால் வேறு யாரு என்கிற அளவிற்கு மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். 

சத்யன், நீண்ட நாட்களுக்கு பிறகு இவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு, கதையில் முக்கியமான  கலகத்தை ஏற்படுத்தி அது  நன்மையில் முடிய உதவுகிறார்.

ஆர்ஜே கதிர்,  ” நீ எனக்கு கணபதி மட்டும்  இல்ல . தளபதி டா..” என்று இவரிடம் கவின் சொல்லும் போது, உங்களுக்கு மட்டும் இல்ல கவின் படத்துக்கு படம் அத்தனை  நாயகர்களின் தளபதி இவர் தான் என்று தோன்றியது, அந்தளவுக்கு படத்திற்கு படம் சிறப்பாக  நடிக்கிறார்.

பிரபு – சுஹாசினி ஒரு அற்புதமான தம்பதியராக  நடித்து அழ வைத்து விடுகிறார்கள்.

இதில் சென்னைக்கு வரும் நயன் தாரா, யாரிடம் போன் வாங்கி பேசியிருக்கிறார் என்கிற ஷாட் கிளைமாக்ஸில் ரிவீல் ஆகும் போது அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பி விடாதீர்கள்.  அங்கே இருந்து எடுத்து இங்கே வைத்த விதம் அருமை, எடிட்டர் பிலோமின் ராஜுக்கும், இயகுனர் குழுவுக்கும் பாராட்டுகள்.

Hi, குடும்பத்தோடு கொண்டாட தகுதியான படம்!