TOXIC

Rating - என்ன கொடுக்கலாம் ?

23

a K. Vijay Anandh review

Adult Only Review

நல்லவேளை நயன் தாரா யாஷின் அக்கா ஆகிட்டாங்க, ஹியுமா குரைசி  அப்பாவோட நண்பரோட மனைவி ஆகிட்டாங்க,  கிட்டத்தட்ட அவர்கள் இருவரையும் தவிர படத்தில் வரும் முக்கியமான பெண்களை எல்லாம், கிடைக்கும் இடத்தில் புணர்கிறார் யாஷ். எனது மதர் டங்கே வயலன்ஸ் தான் டா என்று சொல்லும் போது, அதுவும் அதாவது சமாச்சாரமும் என்று கூட சேர்த்திருக்கலாம் போல, அந்தளவுக்கு துப்பாக்கிகளுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு பக்கம் கொலைகள், இன்னொரு பக்கம் புணர்ச்சிகள்!

சிறுவயதிலிருந்தே அப்பாவின் அன்பை இழந்து அக்கா நயன் தாராவின் அரவணைப்பில் வாழும் யாஷ்க்கு வரும், தானும் ஒரு மோசமான அப்பாவாக இருந்துவிட்டோமோ அல்லது இருந்து விடுவோமோ என்கிற உளவியல் பயம் தான் இரண்டாவது பாதியோ என்று  எண்ணத்தோன்றுகிறது.

தொழிநுட்ப ரீதியாக மிரட்டியிருக்கிறார்கள், காட்சிக்கு காட்சி!

இந்தியாவில் வெளியாகும் ஹாலிவுட் படம், இந்திய அளவிலான படம் , உலகளவிலான இந்தியப்படம் என்கிற மூன்று வகை திரைப்படங்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.

டாக்ஸிக் இந்த மூன்றுக்குள்ளும் அடங்காத திரைக்கதையாக இருக்கிறது!

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில்  நான்  தான் அந்த பொம்முக்குட்டி என்று கி கி கி என்று சிரிக்கும் அந்த குட்டி தேவதையா இந்த கீது மோகன் தாஸ்..? ஏன் இந்த ரணகளம்..! இதில் இயக்குனராக, ரத்தக்களறியில் குளிப்பாட்டியிருக்கிறார் ரசிகர்களை.

ரீலுக்கு ஒன்றோ இரண்டோ அல்லது எந்த ரீலில் வரும் என்கிற எதிர்பார்ப்புகளுடன் புணர்ச்சி  சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக திரையரங்குகளுக்கு செல்லும் காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது. அந்த தலைமுறையும் இப்பொழுது ஓய்ந்து போய் டய்ர்டாகி விட்டது. இந்த தலைமுறைக்கும் அனைத்தும் உள்ளங்கைகளில், மிகவும் தெளிவாக வந்து கிடைக்கிறது!

டாக்ஸிக், பெரிய எதிர்பார்ப்பு இருந்தது  நிஜம் ,  எதிர்பார்ப்பு ஏமாற்றம் ஆகிவிட்டது என்றால் மிகையாகாது !