a K Vijay Anandh review
1981 இல் நம்மூரை காட்டலாம், காட்டுவது எளிது. ஆனால், 1981 இல் ஜப்பான் டோக்கியோ எப்படி இருக்கும் ? அதன் ரயில், கப்பல், விமான போக்குவரத்து, போலீஸ், ராணுவம் எல்லாம் எப்படி இருக்கும் என்று காட்டுவதற்கு ஒரு அர்ப்பணிப்புடன் கூடிய மெனக்கெடல் வேண்டும், உண்மையில் அது இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல, காட்சிக்கு காட்சி செதுக்கியிருக்கிறார்.
ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு விஜய் வேலுகுட்டியின் எடிட்டிங் மற்றும் கலை இயக்குனரின் கைவண்ணம் என்று தொழில்நுட்ப ரீதியாக அனைத்தும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக , மைசூர் தசரா விஞ்ச் போன்றவை அபாரம். மகாராஷ்ட்ராவில் காட்டப்படும் அந்த உச்சிமலை கோட்டை, பாதாள அடுக்குகள் என்று மிரட்டியிருக்கிறார்கள்.
சாம் சி எஸ்ஸின் 100 வது படம், மனிதர் சிறப்பு கவனம் செலுத்தியிருக்கிறார் போலும், அட்டகாசமான பின்னணி இசை.\
கதையை 1981 மற்றும் சம காலத்திற்கு மாற்றி மாற்றி கொண்டு வந்து அப்பா கார்த்தி மகன் கார்த்தியை காட்டினாலும், இரண்டு கதாபாத்திரங்களுக்கும் குறைந்த அளவு ஒப்பனை வேறுபாடே இருந்தாலும் தனது உடல்மொழிகள் மூலம் இரண்டிற்கும் புதிய பரிமாணங்கள் கொடுத்து அசத்தியிருக்கிறார் கார்த்தி. பருத்தி வீரன் கார்த்தியிலிருந்து முழுமையான வெஎறு பட்ட கார்த்தியை சர்தார் தொடர்கள் பார்க்க முடிகிறது. மற்றபடங்களில் எங்காவது ஒரு இடத்தில் பருத்திவீரனின் நக்கல் வெளிப்பட்டுவிடும். இதில் ரா ஏஜெண்டுகளாக கடமையே கண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும், வாலிப வயதில் இருக்கும் மகனுடன் இரண்டு நாட்கள் மட்டுமே தன் கூட இருக்கும் அப்பா சர்தாருக்கு , செண்டிமெண்டுகளுக்கு இடம் கொடுக்காமல் கடமையை மட்டுமே எப்படி செய்வது என்று பாடம் எடுக்கும் மகன் கார்த்தி, அப்பனுக்கு பாடம் சொன்ன சுபபையாவாக – அட கார்த்தியாக உயர்ந்து நிற்கிறார் .
மாளவிகா மோகனன், ஆஷிகா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
எஸ் ஜே சூர்யா, இந்தப்படத்தில் தனது பாடியில் நடிகிறார்- நிற்கிறார் – ஆனால் லெஜண்ட் சரவணன் போல நடக்கிரார், உங்களுக்கு எப்படி தெரிகிறது என்று சொல்லுங்கள். வழக்கமாக நமது படைப்பாளிகள் ஒரு இடத்தில் கோட்டை விடுவார்கள், இதில் கோட்டைவிடும் இடம் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திர உருவாக்கம் தான். அந்த கிராமத்தில் இருந்து தப்பித்துபோன யோகானந்த், கிட்டத்தட்ட யோகி என்கிற அதே பெயரில் சர்வதேச டானாக வலம் வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியாவை அழிக்க நினைக்கும் தீவிரவாதியாக ஒரு குறிப்பிட்ட மதத்தவரை காட்டாமல் எஸ்கேப் ஆவது என்கிற சிந்தனையில் , கோட்டைவிட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது.
சர்தார் 2, நிச்சயம் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் கதைக்களம், ஒரு சில குறைகளை தவிர அனைத்தும் நிறைவாகவே இருக்கிறது.