a K Vijay Anandh review
ஒரு கச்சிதமான திரைக்கதை, கொரனா லாக்டவுன் காலக்கட்டத்தை பயன்படுத்தி ஒரு பெரிய பங்களா மற்றும் மருத்துவமனை ஆகிய இரண்டே இடங்களில் வைத்து ஒரு கிரைம் திரில்லர் ஆக 4 Idiots படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன்.
பணம் திருட வந்து உறுப்புகளை திருடகொடுக்கப்போகும் எலிகளாக பங்களாவுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள் புகழ், கும்கி அஸ்வின், இந்திரன் இளங்கோவன், திடியன் திருச்செல்வம் ஆகிய நான்கு நண்பர்கள்.
ஒவ்வொரு முறை அவர்கள் தப்பிக்க போடும் முயற்சிகள் தோல்வியடைவதும், ஆம்புலன்சில் வெளியேறினாலும் பாவா லட்சுமணன் மூலம் மீண்டும் பங்களாவுக்கே வருவதும் சிரிப்பை வரவழைக்கும் ரகம்.
அவர்களை மிரட்டும் chief ஆக நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார் ரவி மரியா.
இன்னொரு பக்கம் உடல் உறுப்புகளை திருடி வெளிநாட்டவருக்கு அதிக விலைக்கு விற்கும் மருத்துவராக மிரட்டியிருக்கிறார் வின்சென்ட் அசோகன்.
ரகசிய போலீஸ் ஆக வரும், பிரக்யா நயன், இன்னொரு நயன் தாராவாக வலம் வருவாரா என்கிற அளவிற்கு குறைவான காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார்.
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமும் ஒளிப்பதிவில் நேர்த்தியும் இருந்திருந்தால் இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக மாறியிருக்கலாம்.
கடைசியில் அங்கே கருப்பு பணம் இல்லாதது, காவல்துறை வந்து அத்தனை பேரையும் கைது செய்வது என்று சுபமாக முடித்திருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பை 4 Idiots என்பதற்கு பதிலாக ரம்மி பாய்ஸ் என்று வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும், எப்படி என்பதை படம் பார்க்கும் ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்.